Retta Thala: அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் 2வது பாடலை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் மத்தியில் வைரல்!

Retta Thala Movie 2nd Single: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் அருண் விஜய். இவரின் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் ரெட்ட தல. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Retta Thala: அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் 2வது பாடலை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் மத்தியில் வைரல்!

ரெட்ட தல திரைப்பட பாடல்

Published: 

21 Nov 2025 21:19 PM

 IST

நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருகிறார். இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன் வேடத்திலும் நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் கடைசியாக வெளியான இட்லி கடை (Idli Kadai) என்ற படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில், அவரது கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக அருண் விஜய்யின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Kirish Thirukumaran) இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை பிடிஜி யுனிவர்ஸல் நிறுவனம் தயாரிக்க, சாம் சிஎஸ் (Samm CS) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய “கண்ணம்மா” என்ற பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “கண்டார கொள்ளி” (Kandara kolli) என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : யூடியூபில் ‘100 மில்லியன்’ வியூஸைக் கடந்த ‘ஊரும் பிளட்’ பாடல்… நன்றி தெரிவித்து சாய் அபயங்கர் பதிவு!

ரெட்ட தல திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து அருண் விஜய் வெளியிட்ட பதிவு :

விமர்சனங்களுக்குளாகும் ரெட்ட தல பட 2வது பாடல் :

இப்படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக 2வது பாடல் வெளியாகியுள்ளது. கண்டார கொள்ளி என்று இப்படத்தின் லிரிக்கல் தொடங்கும் நிலையில், இது விமர்சனங்களுக்குள்ளாகிவருகிறது.

இதையும் படிங்க: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ! 

ரெட்ட தல திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது?

இப்படத்தில் நடிகர் அருண் விஜய் ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரே கதாநாயகனாகவும், பின் அவரே முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகைகள் சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பாலாஜி முருகதாஸ், யோகி சாமி மற்றும் ஜான் விஜய் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகிறது. இப்படத்துடன்தான் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!
அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?
Jana Nayagan: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ!
பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?
Amaran Team: அமரன் பட திரையிடல்… சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமரன் படக்குழு!
யூடியூபில் ‘100 மில்லியன்’ வியூஸைக் கடந்த ‘ஊரும் பிளட்’ பாடல்… நன்றி தெரிவித்து சாய் அபயங்கர் பதிவு!
மொபைல் போன் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ரூ.10 கோடி காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
விஜய் தேவரகொண்டா பற்றி மறைமுகமாக பேசிய ரஷ்மிகா
கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி யானை - 3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்பு