ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் – அருண் விஜய்

Actor Arun Vijay: கோலிவுட் சினிமாவில் வில்லன், நாயகன் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் - அருண் விஜய்

அருண் விஜய், தனுஷ்

Published: 

14 Sep 2025 20:13 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது 52-வது படமாக உருவாகியுள்ளது இட்லி கடை படம். இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உட்பட பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது அனுபவங்கள் குறித்து நிகழ்ச்சிக்கு சென்றபோது பேசியுள்ளனர். அதில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். அதில் நடிகர் அருண் விஜய் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் கூட நடிக்க வேண்டும் என்ற ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நான் நினைக்கல:

அதன்படி அருண் விஜய் பேசியதாவது, தனுஷின் ராயன் படத்தைப் பார்த்தபோதே அவரோட வேலை செய்யனும்னு நான் ஆசைப்பட்டேன். என்னோட ஆசை இவ்வளவு சீக்கிரமே நிறைவேறும்னு நான் நினைச்சுக் கூட பாக்கல. இந்தப் படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு.

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாம ஃபேமிலி ஆடியன்ஸ்கு ரொம்ப பிடிச்ச படமாக இருக்கும்னு நான் நம்புறேன். தனுஷ் திறமைகள் நிறைந்த ஒரு மனிதர். அவரைப் பார்த்து நிறைய இடத்தில் வியந்தேன். இந்தப் படம் மூலம் நிறையபேர் கூட முதன்முறையா நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனுஷின் டைரக்‌ஷன் திறமை மிகவும் தனித்துவமான ஒன்றாக உள்ளது என்றும் அருண் விஜய் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Also Read… தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக அறிமுகம் ஆன சாண்டி – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

இணையத்தில் வைரலாகும் அருண் விஜயின் பேச்சு:

Also Read… விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன கவின் – என்ன காரணம் தெரியுமா?