ஒரு தரமான சம்பவம் இருக்கு… இட்லி கடை குறித்து பேசிய அருண் விஜய்

Arun Vijay: தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன் என மாறி மாறி கலக்கி வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது குறித்து இன்று மதுரையில் நடைப்பெற்ற விழா ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு தரமான சம்பவம் இருக்கு... இட்லி கடை குறித்து பேசிய அருண் விஜய்

அருண் விஜய்

Published: 

24 Sep 2025 20:50 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமாரின் மகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அருண் விஜய் (Arun Vijay). கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அருண் விஜய். தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக இவர் நடித்து இருந்தாலும் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து பல வருடங்களாக சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற நடிகர் அருண் விஜய் போராடி வந்தார். அந்த நிலையில் தான் இவரின் சினிமா வாழ்க்கையை உயர்த்துவதற்காவே வந்தப் படமாக அமைந்தது என்னை அறிந்தால். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் மிரலான ஸ்டைலான வில்லனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றா. இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அருண் விஜயின் ரசிகர்களின் வட்டாரம் பெரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் தனுஷின் இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். படத்தின் விழா இன்று மதுரையில் நடைபெறும் போது அருண் விஜய் பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இட்லி கடை படத்தின் நீங்க சூப்பரான வில்லன பாப்பீங்க:

அதன்படி நடிகர் அருண் விஜய் பேசியதாவது, என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு, ஒரு திடமான வில்லன் கதாபாத்திரத்தைத் தேடிக்கொண்டிருந்தேன், அது இட்லி கடையில் நடந்தது. தனுஷ் சாருடன் பல மறக்கமுடியாத அனுபவங்கள் கிடைத்தன. இது என் வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்றும் நடிகர் அருண் விஜய் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இணையத்தில் கவனம் பெறும் அருண் விஜயின் பேச்சு:

Also Read… மலையாளம்னா படம் ஓடியிருக்கும்.. ரிவியூ செய்யும் மனநோயாளிகள்.. கொந்தளித்து பேசிய மெய்யழகன் இயக்குநர்!