நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!
Actor Arjun Das: கோலிவுட் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று தற்போது நாயகன் வில்லன் என மாறி மாறி கலக்கி வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அர்ஜுன் தாஸ் காதல் கதைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தாஸ்
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). அதனைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் வில்லனாக மாஸ் நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் அர்ஜுன் தாஸ். இதில் நாயகனாக நடிகர் கார்த்தி நடித்து இருந்த நிலையில் இந்தப் படம் அர்ஜுன் தாஸிற்கு கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்திக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ் காட்டியதைத் தொடர்ந்து அடுத்ததாக தொடர்ந்து வில்லனாக மட்டும் இன்றி நாயகன் மற்றும் வில்லன் என்று மாறி மாறி நடித்து வருகிறார். அதன்படி நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்த அநீதி, போர் மற்றும் ரசவாதி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதியாக அர்ஜுன் தாஸ் அஜித் குமாருக்கு வில்லனாக குட் பேட் அக்லி படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் இன்று 12-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு பாம் படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸிக் காதலனாக ஒருபோதும் நடிக்கமாட்டேன்:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தான் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது காதல் படங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது நான் காதல் படங்களில் நடித்தால் அது ஒரு க்ளீன் லவ் ஸ்டோரியாக மட்டும் தான் இருக்கும். டாக்ஸிக் லவ்வராகவோ அல்லது குடிக்கிறது, பெண்களை அபியூஸ் செய்ற காதலனாக நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதுல நான் எப்பவும் தெளிவா இருப்பேன் என்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!
இணையத்தில் கவனம் பெறும் அர்ஜுன் தாஸ் பேச்சு:
#ArjunDas Recent
– #OnceMore is a clean love story. When I do a love story, there is no toxic love, I am very particular about that.
– I don’t want any kind of love story that abuses women.pic.twitter.com/Dawc5Mtrzc— Movie Tamil (@_MovieTamil) September 10, 2025