Killer : 20 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி.. ‘கில்லர்’ படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
SJ Suryah Killer Movie Update :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. பல வருடங்களுக்குப் பின் இவரின் இயக்கத்தில் உருவாகும் படம்தான் கில்லர். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே சூர்யா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah) , அஜித்குமாரின் வாலி (Vaalee) திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இவரின் இயக்கத்தில் தமிழில் விஜய் முதல் அஜித் குமார்வரை நடித்திருக்கின்றனர். இயக்குநராக சினிமாவில் நுழைந்த இவர், தனது இயக்கத்தில் வெளியான நியூ (New) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவும் தனது நடிப்பைத் தொடர்ந்தார். பின் மற்ற இயக்குநர்களில் திரைப்படங்களிலும் முக்கிய வில்லனாகவும் நடிப்பைத் தொடங்கினார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன் (Veera Dheera Sooran) . சியான் விக்ரமின் (Vikram) இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் எஸ்,ஜே. சூர்யா, சுமார் 10 வருடத்திற்குப் பின் இயக்குநராகப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த படத்திற்கு கில்லர் (Killer) என டைட்டில் வைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தைக் கோகுலம் மூவிஸ் நிறுவனமானது தயாரித்தது வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், படத்தின் இசையமைப்பாளரைப் பற்றிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைக்கவுள்ளாராம். இது குறித்த பதிவை இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட கில்லர் பட இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு :
Yah it’s none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir 🥰🥰🥰💐💐💐💐💐💐sirrrr welcome on board sir 🙏🔥🙏🥰 immensely happy joining you again sir 🙏🙏🙏 #killer@GokulamGopalan #VCPraveen#BaijuGopalan#Krishnamoorthy… pic.twitter.com/kC9XPIs9mo
— S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025
இந்நிலையில், தற்போது இந்த கில்லர் திரைப்படத்தில் இசையமைப்பாளராக எஸ்.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். எஸ்.ஜே. சூர்யா மற்றும் எஸ்.ஆர். ரஹ்மானின் கூட்டணியில் சுமார் 20 வருடங்களுக்குப் பின் இந்த படம் உருவாக்கவுள்ளது. எஸ்.ராஜ். ரஹ்மான் இறுதியாக எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இந்த கில்லர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லர் திரைப்படம் :
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் இசையமைப்பில் உருவாகிவரும் படம் திரைப்படம்தான் கில்லர். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாகவும் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூலை தொடக்கத்தில் பூஜைகளுடன் ஆரம்பமானது. எஸ்.ஜே. சூர்யா பல வருடங்களுக்குப் பின் இயக்குநராக மீண்டும் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ராகவா லாரன்ஸ் முதல் பல நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த கில்லர் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். இவர் தமிழில் ஏற்கனவே அயோத்தி மற்றும் கிஸ் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் இந்த படத்தில் ஜோடியாக நடித்துவருகிறார்.
இந்த கில்லர் படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாம். மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் வெளிநாடுகளில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.