அப்படி கூப்டாதீங்க எனக்கு புடிக்கல… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
AR Rahman: இசை ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் ரசிகர்கள் தன்னை பெரிய பாய் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அப்படி அழைக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman). சமீபத்தில் பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உடன் ஒரு கலந்துறையாடலில் கலந்துகொண்டார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போது திவ்யதர்ஷினி ஏ.ஆர்.ரகுமானை பெரிய பாய் என்று அழைக்க அதென்ன பெரிய பாய் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி உங்களை எல்லாம் செல்லமா அப்படிதான் ரசிகர்கள் கூப்பிடுறாங்க என்று கூற அப்படி கூப்டாதீங்க எனக்கு பிடிக்கல. அதென்ன பெரிய பாய் கசாப் கடையில கறி வெட்றவங்கள கூப்பிட மாதிரி இருக்கு என்று கலகலப்பாக பேசினார். தமிழ் சினிமா ரசிகர்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பெரிய பாய் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்:
தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கு பெருமையாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தான் இசையமைத்த முதல் படத்தின் மூலமாகவே பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
#DD ~ Periya Bhaii#ARRahman ~ Periya Bhai ah😳👀#DD ~ That’s your Nickname sir😀#ARRahman ~ Vendam Enaku Pidikala. Periya Bhai, Chinna Bhai nu,,, Naa Enna Kasappu Kadai Ah Vachutu Iruken😂🔥pic.twitter.com/f4XMel3prx
— AmuthaBharathi (@CinemaWithAB) May 19, 2025
தமிழில் தொடங்கி பான் இந்திய அளவில் தனது பெயரை முத்திரையாக இசை உலகில் பதியவைத்தார் ஏ.ஆர்.ரகுமான். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்:
தமிழில் இவர் இறுதியாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழில் இவரது இசையில் தக் லைஃப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்ஸ்டா போஸ்:
View this post on Instagram
இந்தப் படத்தில் இருந்து முன்னதாக ஜிங்குச்சா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் – திருமணம் இந்த காம்போ எப்போதுமே ஹிட் தான் என்பது போல ஜிங்குச்சா பாடலும் தற்போது சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இருந்து சுகர் பேபி என்ற பாடல் அடுத்ததாக வெளியாகவுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் மற்ற மொழிகளில் வரிசைக்கட்டும் படங்கள்:
தமிழில் படங்கள் வரிசையாக இசையமைப்பது போலவே மற்ற மொழிகளிலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இந்தியில் இயக்குநர் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் லாகூர் 1947, இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.