விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை – ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugados talks about Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் எப்படிப்பட்ட நடிகர் என்பது குறித்தும் அவர் எப்படி திரைக்கதையை கையாள்வார் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய்

Published: 

31 Dec 2025 21:12 PM

 IST

தமிழ் சினிமாவில் தீனா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் அறிமுக இயக்குநராக அறிமுகம் ஆகியக முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் குமார், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பலரை இயக்கி உள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் இயக்க உள்ளது யார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற்னர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மட்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை மூன்று படங்களை இயக்கி உள்ளார். அதில் ஒன்று துப்பாக்கி, இரண்டாவது கத்தி மற்றும் மூன்றாவது சர்க்கார். ஆகும் அதன்படி இவர்கள் கூட்டணியில் வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் பணியாற்றுவது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்கைடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை:

தளபதி விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை, மாறாக இயக்குநரின் பார்வையைச் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்பது ஒரு சாதாரண வசனம் என்று நான் நினைத்தேன். ஆனால், அந்த மூன்று படங்களிலும் வெவ்வேறு மாறுபாடுகளுடன் நடித்து என்னை ஆச்சரியப்படுத்தினார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… அந்த விதத்தில் கார்த்தியை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமை – சூர்யா சொன்ன விஷயம்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் கம்ருதின் குறித்து புறணி பேசும் பார்வதி மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!
டெல்லி குண்டுவெடிப்பில் 40 கிலோ உயர்தர வெடிப்பொருட்கள் - அமித் ஷா பகீர் குற்றச்சாட்டு
சோகத்தில் முடிந்த ஹனிமூன்.. புதுமண தம்பதி தனித்தனியே தற்கொலை!
தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..