Anirudh Ravichander : கூலி படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகல… – அனிருத் பகிர்ந்த தகவல்
Anirudh About Coolie Movie Fans Hype : லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில், பான் இந்தியத் திரைப்படமாக வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் கூலி. இந்த படத்தைப் பற்றி, இசையமைப்பாளர் அனிருத் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கூலி திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தலைவர் 171 (Thalaivar171) என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைக் கோலிவுட் உச்ச இயக்குநரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருக்கிறார். இவர் ரஜினிகாந்த்துடன் இணையும் முதல் படமாகும். இந்த கூலி திரைப்படமானது பான் இந்தியா அளவிற்கு மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனிருத், கூலி படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஹைப் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அவர் அதில் கூலி படத்தின் மீது ரசிகர்கள் கொடுக்கும், ஹைப்பிற்கு, நிச்சயமாகத் தரமான படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அவர் பேசியது பற்றி இன்னும் விவரமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : சிக்கந்தர் படம் தோல்வி.. காரணம் சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்!
கூலி திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், ” சில நாட்களுக்கும் முன்தான் லோகேஷ் கனகராஜுடன் நான் பேசினேன். கூலி படத்திற்கு இருக்கும் வரவேற்பு குறித்து. ரஜினிகாந்த்தின் கூலி படத்திலிருந்து, 3 பாடல்கள், 5 நடிகர்களில் பேக் ஷாட் மட்டும்தான் வந்திருக்கு. படத்தின் டீசர் வரல, டிரெய்லர் வரல, ஒண்ணுமே வரவில்லை. முதல் பாடல் நாங்கள் தனியாக ஷூட் செய்தோம், இரண்டாவது பாடல் மோனிகா படத்தின் சில காட்சிகள் மட்டும் வந்தது. மேலும் எல்லா நடிகர்களின் பேக் ஷாட் மட்டும் வந்தது. வேறு எதுவும் படத்திலிருந்து வரவில்லை.
இதையும் படிங்க : இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
கூலி படத்தின் ட்ரெய்லர் குறித்துப் படக்குழு வெளியிட்ட வீடியோ :
Are you ready to witness the most-anticipated #CoolieTrailer?
Launching at #CoolieUnleashed 💥August 2nd at Jawaharlal Nehru Indoor Stadium! @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/1IZh9YZBO3
— Sun Pictures (@sunpictures) August 1, 2025
ஆனாலும் படத்தின் மீதான ஹைப் அதிகமாக இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பதைப் போல, நிச்சயமாகத் தரமான படமாக இருக்கும்” என இசையமைப்பாளர் அனிருத் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது.