இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது.. கலைமாமணி விருது வென்ற அனிருத் நெகிழ்ச்சி!

Anirudh Ravichander: கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது, தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் சிறப்பாக இசையமைத்து வருபவர் அனிருத். இவருக்கு தமிழக அரசின் சார்பாக கடந்த 2025 செப்டம்பர் 24ம் தேதியில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அனிருத் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது.. கலைமாமணி விருது வென்ற அனிருத் நெகிழ்ச்சி!

அனிருத்

Published: 

26 Sep 2025 12:00 PM

 IST

கோலிவுட் சினிமாவில் தனது 21ம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துவந்த நிலையில், தற்போது சுமார் ரூ.400 கோடி பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்தும் வருகிறார். அந்த அளவிற்கு சினிமாவில் தனது வளர்ச்சியை இசையின் மூலமாக அதிகப்படுத்திவருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து வரும் இவர், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களுக்கு சிறப்பாக இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பு தற்போது மிக பிரம்மாண்டமான படங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு (A.R. Rahman) அடுத்ததாக அனிருத் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், கடந்த 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் (Kalaimamani Award) கடந்த 2025 செப்டம்பர் 24ம் தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது ரசிகர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் எக்ஸ் பதிவு ஒன்றை அனிருத் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஹாரிஷ் ஜெயராஜ் நடனமாடி பாத்திருக்கீங்களா! சாண்டி மாஸ்டர் சொன்ன விஷயம்!

கலைமாமணி விருது அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து அனிருத் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அந்த பதிவில் அனிருத், “மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் மற்றும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தாய்லாந்திற்கு சிலம்பரசன் – லோகேஷ் கனகராஜ் பயணம் – காரணம் என்ன தெரியுமா?

மேலும் அந்த பதிவில் அனிருத், அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள், அதைவிடவும் மதிப்புமிக்க எப்போது அன்பும் ஆதவரும் அளித்துவரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது” என்று அந்த பதிவில் இசையமைப்பாளர் அனிருத் நன்றி தெரிவிதுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலைமாமணி விருது பெற்ற தமிழ் பிரபலங்கள் :

கடந்த 2021, 2022, 2023 போன்ற ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமி, சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மேனன், பாடலாசிரியர் விவேக் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் என பல்வேறு பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகளை பெரும் பிரபலங்களை ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.