இந்தியாவிலே சிறந்த சினிமாத்துறை என்றால் அதுதான்- ஆண்ட்ரியா ஜெரேமியா ஓபன் டாக்!
Andrea Jeremiahs: தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் பாடகியாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா ஜெரோமியா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் இந்தியாவிலே சிறந்த சினிமாதுறை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஆண்ட்ரியா ஜெரேமியா
கோலிவுட் சினிமாவின் பிரபல பாடகி மற்றும் நடிகையாக கலக்கி வருபவர் ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah). இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான “பச்சைக்கிளி முத்துச்சாரம்” (Pachaikili Muthucharam) என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையை அறிமுகமானார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் கார்த்தி (Karthi) வரை பல்வேறு பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிப்பில் உருவாகிவரும் “மாஸ்க்” (Mask) என்ற படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் கவின் (Kavin) நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் இந்தியாவிலே சிறந்த சினிமாதுறை எது என்பார்த்து பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் எந்த சினிமாவை குறிப்பிட்டார் என்பதை குறித்து விளக்கமாக தற்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க : 1000 கோடி வசூல் செய்த படமும் இல்லை அதனால் பதற்றம் இல்லை – சமந்தா அதிரடி பேச்சு!
சிறந்த சினிமாதுறை பற்றி நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, “மலையாளத்தில் அன்னையும் ரசூலும் படம் பண்ணும்போது, ராஜிவ் ரவி பணியாற்றுகிறார் என்று சொன்னது அந்த படத்தின் நடிப்பதற்கு ஓகே சொன்னே. அவர் மிக சிறந்த டிஓபி-யும் கூட, அந்த சமயத்தில் பகத் ஃபாசிலை யாருக்கு அந்த அளவிற்கு தெரியாது. ஆனால் தற்போது அவர் மிகவும் பிரபலமானவர். அன்னையும் ரசூலும் படம் மிகவும் சிறந்த படம்.
இதையும் படிங்க : அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.. தனது ஆசையை தெரிவித்த பிரியங்கா மோகன்!
அந்த படத்தை அடுத்தாக மலையாளத்தில் எனக்கு தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தது. எனக்கு அந்த மாதிரி படம் பண்ணவேண்டும் என ஆசை இல்லை, எனக்கு அன்னையும் ரசூலும் போல மாறுபட்ட கதையில் படம் பண்ணவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அந்த படத்திற்கு பின் அதுபோன்ற கதையில் எந்த படங்களும் எனக்கு கிடைக்கவில்லை.
இனிமேல் அந்த மாதிரி படம் வந்தால் மலையாள சினிமாவில் நான் நிச்சயமாக நடிப்பேன். ஏனென்றால் எனக்கு மலையாள சினிமாவின் மீது அதிக மரியாதையை இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் மலையாள சினிமாதான், இந்தியாவிலே சிறந்த சினிமா துறை என்று நான் கூறுவேன்” என நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா நேர்காணலில் பேசியிருந்தார்.
ஆண்ட்ரியா ஜெரேமியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
ஆண்ட்ரியா ஜெரேமியாவின் புதிய படங்கள் :
நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா நடிப்பில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. பிசாசு 2, நோ என்ட்ரி, மாஸ்க் மற்றும் மனுஷி என் 4 படங்களின் ஷூட்டிங் முடிந்து வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. மேலும் இந்த படங்களில் பிசாசு 2 மற்றும் மனுஷி போன்ற படங்களில் வெளியீட்டில் பிரச்சனைகள் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.