கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் சொன்னது இப்படிதான் – இயக்குநர் அமீர் விளக்கம்

Director Ameer: கன்னட மொழி குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியதை தவறாக திரித்து விட்டார்கள். அதனை அரசியலாக்க வேண்டும் என்ற என்னத்தில் பிரச்சனையை பெரிதாக்கி விட்டாரக்ள் என்று இயக்குநர் அமீர் பேசியுள்ளார். மேலும் கமல் ஹாசனின் பேச்சின் விளக்கம் இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் சொன்னது இப்படிதான் - இயக்குநர் அமீர் விளக்கம்

கமல் ஹாசன், அமீர்

Updated On: 

06 Jun 2025 13:20 PM

 IST

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் தக் லைஃப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமார் குறித்து பேசுகையில் கன்னட மொழியும் தமிழ் மொழியில் இருந்து பிரிந்து சென்றதுதான். மேலும் அவரும் நமது குடும்பத்தில் ஒருவர்தான் என்று பேசியிருந்தார். இது கர்நாடகாவில் உள்ள கன்னட மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கன்னடர்களையும் கன்னட மொழியையும் அவமதிக்கும் விதமாக நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார் என்றும் அவர் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் மொழி ஆர்வளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் மன்னிப்பு கோரவில்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என்றும் மிரட்டல் விடுத்தனர்.

நீதிமன்றத்தை நாடிய கமல் ஹாசன்:

இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் கமல் ஹாசன் தனதுக்கு சரியான நீதி கிடைக்கும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடினார். மாறாக கர்நாடகா உயர் நீதிமன்றம் கமல் ஹாசனிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியதுடன் ஒரு மன்னிப்பு கோரி இருந்தால் இது இவ்வளவு பிரச்னைக்கு வந்து இருக்காது என்று தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்பதி என்ன ஈகோ என்பது போலவும் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு:

இந்த நிலையில் நீதிமன்றத்தில் தகுந்த நீதி கிடைக்காத காரணத்தால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதில் தாமதம் ஆகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கர்நாடக சினிமா வர்த்தக சபை பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிட தயார் என்று தெரிவித்தது. ஆனால் இதற்கு தக் லைஃப் படக்குழு உடன்படவில்லை.

அதன் காரணமாக நேற்று ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு நாடுமுழுவதும் தக் லைஃப் படம் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் கர்நாடகாவில் இருக்கும் கமல் ஹாசனின் ரசிகர்கள் தக் லைஃப் படத்தை பார்க்க ஓசூருக்கு படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அமீர் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இயக்குநர் அமீர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில் இந்த கன்னட மொழி பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில், கமல் ஹாசன் எந்த மொழியையும் தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. மேலும் அவர் கன்னட மொழியை திராவிட மொழி குடும்பத்தில் ஒன்றாகதான் கூறியுள்ளார். இதனை அரசியல் ஆக்க வேண்டும் என்று சில கன்னட அமைப்புகள் பெரிதாக மாற்றிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories
Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!
நெட்ஃபிலிக்ஸில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படம் – என்ன காரணம் தெரியுமா?
சந்தானத்திற்கு நிஜமாவே அந்த சீன்ல தூக்கம் வந்துட்டு இருந்தது –  சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த ஜீவா
நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்
இந்தியாவிலே சிறந்த சினிமாத்துறை என்றால் அதுதான்- ஆண்ட்ரியா ஜெரேமியா ஓபன் டாக்!
மீண்டும் இணைகிறதா சிவகார்த்திகேயனின் மதராஸி கூட்டணி? – வைரலாகும் தகவல்!