Billa: வசூலின் உச்சம்.. வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த அஜித் குமாரின் பில்லா திரைப்படம்!

18 Years Of Billa: அஜித் குமாரின் நடிப்பில் தமிழிலமொத்தமாக இதுவரை 63 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் ரசிகர்களிடையே இன்றுவரையிலும் பிரபலமாக பேசப்படும் படம்தான் பில்லா. இந்த படமானது இன்று 2025 டிசம்பர் 14ம் தேதியுடன் வெளியாகி 18 வருடத்தை கடந்துள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Billa: வசூலின் உச்சம்.. வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த அஜித் குமாரின் பில்லா திரைப்படம்!

பில்லா திரைப்படம்

Published: 

14 Dec 2025 21:35 PM

 IST

கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் சிறுவனாக ஒரு படத்தின் மூலம் நடிக்க தொடங்கியிருந்தார். பின் தமிழில் கடந்த 1993ம் ஆண்டில் வெளியான அமராவதி (Amaravathi) என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தர். இந்த படத்தை அப்போது பிரபலமான இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்தாக தொடர்ந்த தமிழில் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் இவரின் நடிப்பில் வெளியான படங்கள் மக்களிடையே அந்தளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும், தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

அந்த வகையில் இவருக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பை கொடுத்த படம்தான் பில்லா (Billa). கடந்த 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் (Vishnuvardhan) இயக்கியிருந்தார். இப்படமானது கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பல் 14ம் தேதியுடன் இந்த படமானது வெளியாகி 18 வருடத்தை கடந்துள்ளது. இது தொடர்பான தகவல் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: உந்தன் மூச்சு காற்றை தான் என் சுவாசம் கேட்குதே… 13 ஆண்டுகளை நிறைவு செய்தது நீதானே எந்தன் பொன்வசந்தம் படம்!

பில்லா படம் 18 வருடத்தை கடந்தது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு :

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருந்த படம்தான் பில்லா. இந்த படத்தில் அஜித் குமாருடன் நடிகர்கள் நயன்தாரா, பிரபு, ரஹ்மான் மற்றும் நமிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது இந்தியில் வெளியான டான் படத்தின் கதையை மையாமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கேங்ஸ்டர் கதையில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் என்று கூறலாம். படமான 2007ம் ஆண்டில் வெளியாகி திரையரங்குகளில் மட்டும் சுமார் 175 நாட்களுக்கும் மேல் வெளியாகிவந்திருக்கிறது.

இதையும் படிங்க: AK64-ல் அஜித் குமார்- ஸ்ரீலீலா ஜோடி உறுதி… வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் இப்படம் மொத்தமாக சுமார் ரூ 100 கோடிகள் கிட்ட வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து அசத்தியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தொடர்ச்சியாக பில்லா 2 படமும் கடந்த 2012 ஆண்டில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்