‘Racing isn’t acting’.. அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது!

Ajith Kumar Race Documentary Teaser: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அசத்திவருபவர் அஜித் குமார். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக ரேஸில் இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் கார் ரேஸ் காட்சிகளானது ஆவணப்படமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இதன் டீஸரை சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Racing isn’t acting.. அஜித் குமாரின் கார் ரேஸ் ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது!

அஜித் குமார்

Published: 

22 Dec 2025 15:12 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச பிரபலமாக இருந்தவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தற்போது முழுவதுமாக கார் ரேஸ் போட்டியில் களமிறங்கியுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 4 க்கும் மேற்பட்ட கார் ரேஸ் (Car Race) போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த போட்டிகளால் வெற்றிகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதலே இந்த கார் ரேஸ் பயிற்சியில் அஜித் குமார் தீவிரமாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் இத்தாலி (Italy), பிரான்ஸ், துபாய் மற்றும் மலேசியா (Malaysia) உட்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொண்டிருந்தார்.

அந்த வகையில் இந்த கார் ரேஸ் பயிற்சி, போட்டிகள் அஜித் குமாரின் கஷ்டங்கள் எல்லாம் ஒரு ஆவணப்படமாக (Documentary) உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆவணப்படத்தை ” ரேஸ் என்பது நடிப்பு இல்லை” என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. தற்போது இதன் டீஸர் வெளியாகியுள்ளது. இது குறித்த பதிவை அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா (Suresh Chandra) பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமார் சார் ரொம்ப குழந்தை மாதிரியான குணம்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!

சுரேஷ் சந்திரா பகிர்ந்த அஜித் குமாரின் ஆவணப்படத்தின் டீஸர் பதிவு :

இந்த டீஸரில், அஜித் குமார் கார் ரேஸில் நுழைந்தது முதல் அவருக்கு ஏற்பட்ட விபத்துகள் வரை அனைத்தையும் காண்பிக்கும் வண்ணனத்தில் உள்ளது. தற்போது இந்த டீஸர் அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா ரூத் பிரபு – வைரலாகும் வீடியோ

ஆசிய லீ மேன்ஸ் போட்டியில் பங்கேற்கும் அஜித் குமாரின் அணி:

நடிகர் அஜித் குமாரின் அணி மலேசிய கார் ரேஸை முடித்த கையேடு, தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இறுதியாக நடந்த போட்டியில் அஜித் குமாரின் அணி 4வது இடத்தை பிடித்திருந்தது. மேலும் அஜித் குமாரின் அணியானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள ஆசிய லீ மேன்ஸ் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது. இதனராக தீவிரப்பயிற்சியில் தற்போது இந்த அணியானது ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை