அஜித் குமாரின் 64-வது படம் குறித்து வைரலாகும் சூப்பர் அப்டேட்!

AK 64 Movie Update: நடிகர் அஜித் குமார் நடிப்பு மற்றும் கார் ரேஸ் என்று பிசியாக வலம் வருகிறார். முன்னதாக நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் 64-வது படம் குறித்து வைரலாகும் சூப்பர் அப்டேட்!

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

Published: 

02 Jul 2025 11:49 AM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தற்போது படங்களில் தொடர்ந்து நடிப்பதுடன் தனது கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே 2 படங்கள் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியானது. இதில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். அஜித் குமார் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரு ரோட் ட்ரிப் சென்றுகொண்டிருக்கும் போது த்ரிஷாவை ஒரு கும்பல் கடத்தி விடுகின்றனர். அவரை அஜித் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு காரணம் நடிகர் அஜித்திற்கு இந்தப் படடத்தில் பெரிய அளவில் மாஸ் காட்சிகள் எதும் இல்லை என்பது தான். படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மந்தமாகவே இருந்தது.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த குட் பேட் அக்லி:

அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்திலும் நடிகை த்ரிஷா தான் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரபு, பிரசன்னா, சுனில், சைன் டாம் சக்கோ, ரெடின் கின்ஸ்லி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரிய அளவில் கதை இல்லை என்றாலும் அஜித் குமார் முன்னதாக நடித்து சூப்பர் ஹிட் அடித்தப் படங்களில் பல ரெஃபரன்ஸ்கள் இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்திருந்தனர். அது அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு:

அஜித் குமாரின் 64-வது படம் குறித்த அப்டேட்:

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து தனது 64-வது படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் அஜித் குமார். தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் அஜித் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே படங்களில் நடிப்பது குறித்து தெரிவிக்கப்டும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.