குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த சம்பவம் – நெகிழ்ந்து பேசிய நடிகை
Priya Prakash Varrier: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் நடித்தப்போது நடந்த நிகழ்வு குறித்து நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பேசியது வைரலாகி வருகின்றது.

அஜித் குமார் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்
மலையாள சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தானாஹா என்ற படத்தின் மூலம் நடிகையாம அறிமுகம் ஆனார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier). இந்தப் படத்தில் இவர் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் தான் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை பான் இந்திய அளவில் பிரபலமாக்கியது. ஆம் இந்தப் படத்தி இவர் கண்ணடிக்கும் ஸ்டைல் ரசிகர்களை சொக்க வைத்தது என்றே கூறலாம். இந்தப் படத்திலும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தது. ஆனால் இவரின் கண்ணடிக்கும் காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற படத்தில் இவருக்கான காட்சிகளைப் படக்குழு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரின் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
என் கோரிக்கையை உடனே தீர்த்து வைத்தார் அஜித்:
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பேசியதாவது, என்னோட மாமா மிகப்பெரிய அஜித் ரசிகர். அவர் முதல் முதலா வாட்ஸ் அப் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து அவரோட ஸ்டேட்டஸ் தல போல வருமா தான். நான் குட் பேட் அக்லி படத்தில் நடிச்சுட்டு இருந்த போது அஜித் சார்கிட்ட ரிக்வஸ்ட் செய்தேன்.
சார் நீங்க ஃப்ரீய இருக்கும் போது சொல்லுங்க. என் மாமா உங்களோட மிகப்பெரிய ரசிகர். அவருக்கு வீடியோ கால் பண்ணினா உங்கள பார்த்து மிகவும் சந்தோஷம் ஆகிடுவார்னு கேட்டேன். ஆனா அவர் உடனே பேசலாம்னு உடனே கால் பண்ண சொல்லிப் பேசினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… குழிதோண்டி புதைக்கிற மாதிரியான விசயத்தை பண்ணாதீங்க – பாடகர் சத்யன் மகாலிங்கம்
இணையத்தில் வைரலாகும் பிரியா பிரகாஷ் வாரியனின் வீடியோ:
#priyawarrier : எங்க மாமா வெறிதனமான தல ரசிகர் ஒரு நாள் அஜித் சார் கிட்ட நீங்க உங்க ப்ரீ டைம்ல சொல்லுங்க சார் எங்க மாமா உங்க ரசிகர் நீங்க அவர்கிட்ட பேசுனா அவர் ரொம்ப சந்தோஷபடுவார் சொன்னேன் உடனே தல வீடியோ கால் பண்ணி பேசுனார் அஜித் சார் கிரேட்#Ajithkumar pic.twitter.com/ZPPODPWmhN
— Joe Selva (@joe_selva1) September 16, 2025