இந்தியில் ரீமேக் ஆகும் லப்பர் பந்து.. அட இந்த ஹீரோ நடிக்கிறாரா?
Lubber Pandhu Hindi Remake : கடந்த 2024ம் ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, ஒட்டுமொத்த திரைப்பட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படம் லப்பர் பந்து. இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்துவின் இயக்கத்தில் வெளியான படமானது, தமிழைத் தொடர்ந்து இந்தியில் ரிமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை ஸ்வாசிகா பேசியுள்ளார்.

லப்பர் பந்து திரைப்படம்
கோலிவுட் சினிமாவில் இயக்கிய முதல் படத்தின் மூலம், பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu). இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான படம்தான் லப்பர் பந்து (Lubber Pandhu). இந்த படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்க, நடிகர் ஹரீஷ் கல்யாண் (Harish Kalyan), அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா (Swasika) மற்றும் சஞ்சனா உட்படப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தினை பல சினிமா பிரபலங்கள் வாழ்த்தினர் . குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார். அவ்வாறு பல பிரபலங்களின் மனதைக் கவர்ந்த இந்த லப்பர் பந்து படமானது, இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்வாசிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான ஸ்வாசிகா, ரெட்ரோ, மாமன் படத்தை தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் இந்த படத்தைப் பார்த்து நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) , இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் பேசியதை பற்றி முழுமையாகப் பார்க்கலாம்
இந்தி ரீமேக் பற்றி நடிகை ஸ்வாசிகா பேச்சு :
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்வாசிகா, லப்பர் பந்து படத்தைப் பார்த்து பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் ரசித்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்த லப்பர் பந்து படத்தை இந்தியில் அவர் ரீமேக் செய்யவிரும்புவதாகக் கூறியிருக்கிறார். அந்த இந்தி ரீமேக் படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக, ஸ்வாசிகாதான் நடிக்கவேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் கூறியதாக, நடிகை ஸ்வாசிகா பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்வாசிகவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
ஸ்வாசிகா நடிக்கும் புதிய படங்கள் :
நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பில் இறுதியாக மாமன் மற்றும் ரெட்ரோ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் ரெட்ரோ படத்தில் சூர்யாவின் இளம் வயது அம்மா ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் சூரியின் முன்னணி நடிப்பில் வெளியான மாமன் படத்தில், அவருக்கு அக்கா ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து, சூர்யாவின் 45வது படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.