வைரலான சிம்ரனின் டப்பா ரோல் பேச்சு… அவரே கொடுத்த விளக்கம்

Actress Simran: நடிகை சிம்ரன் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தன்னை ஆண்டி ரோலில் நடிப்பதாக பிரபல நடிகை ஒருவர் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் டப்பா ரோலில் நடிப்பதை விட ஆண்டி ரோலில் நடிப்பது சிறந்தது என்று நடிகை சிம்ரன் பேசியது இணையத்தில் வைரலானது.

வைரலான சிம்ரனின் டப்பா ரோல் பேச்சு... அவரே கொடுத்த விளக்கம்

சிம்ரன்

Updated On: 

22 May 2025 19:57 PM

 IST

நடிகை சிம்ரன் பிரசாந்த் உடன் இணைந்து நடித்த அந்தகன் படத்திற்காக சமீபத்தில் அருக்கு JFW விருது வழங்கும் விழாவில் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் இவர் வில்லியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த விருது வழங்கும் விழாவில் அவர் தன்னுடன் பணியாற்றிய நடிகை ஒருவர் அவரைக் காயப்படுத்தியது குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் நடிகை சிம்ரன் தனக்கு தெரிந்த நடிகை ஒருவரின் நடிப்பை பாராட்டி அவருக்கு மெசேஜ் செய்ததாகவும் அதற்கு அந்த நடிகை ஆண்டி ரோலில் நடிப்பதை விட தான் நடித்த ரோல் மிகவும் சிறந்தது என்பது போல கூறி நடிகை சிம்ரனை காயப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சிம்ரன் ஆண்டி ரோலில் நடிப்பது ஒன்றும் தவறான விசயம் இல்லை என்றும் டப்பா ரோலில் நடிப்பதை விட ஆண்டி ரோல் எவ்வளவோ சிறந்தது என்றும் தெரிவித்தார்.

நடிகை சிம்ரன் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் டப்பா ரோல் என்று நடிகை சிம்ரன் கூறியது யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் பல கருத்துகளை பதிவிட்டனர். அதில் சமீபத்தில் நடிகை ஜோதிகா நெட்ஃபிளிக்ஸில் வெளியான டப்பா கார்டல் சீரிஸினை குறிப்பிட்டு சிம்ரன் சொன்னது ஜோதிகாவைதான் என்றும் தெரிவித்தனர்.

நடிகை சிம்ரனின் வைரல் வீடியோ:

நடிகை சிம்ரன் கொடுத்த விளக்கம்:

சிம்ரன் மறைமுகமாக சொன்னது ஜோதிகாவைதான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் இரண்டு நடிகைகள் ஒருபோதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று கூறியது மீண்டும் வைரலனது. மேலும் அதனை இந்த சம்பவத்திற்கு பிறகே தான் உணர்ந்ததாகவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தர்.

இணையத்தில் வைரலாகும் சிம்ரனின் பேட்டி:

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது அளித்தப் பேட்டி ஒன்றில் டட்டா கேரக்டெர் என்று கூறியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை நானும் பார்த்தேன். அது அவர் அவர் கருத்து. மேலும் ‘டப்பா கார்டல்’ வெப் சீரிஸை நெட்ஃபிளிக்ஸில் பார்த்துவிட்டேன், மிகவும்அருமையாக இருந்தது.

தொடர்ந்து பேசிய சிம்ரன் தனக்கு அவ்வாறு மெசேஜ் செய்த நடிகை தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாகவும், மேலும் அவர் என்னை காயப்படுத்தும் நோக்கில் அதை கூறவில்லை என்றும் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் நடிகை சிம்ரன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்