Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான் – நடிகை சமந்தா ஓபன் டாக்

Actress Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா ரூத் பிரபு சினிமாவில் நடிகை என்பதை தாண்டி தற்போது புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவரது தயாரிப்பில் மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சுபம் படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான் – நடிகை சமந்தா ஓபன் டாக்
நடிகை சமந்தாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 12 May 2025 11:15 AM

நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் கலாட்டா ப்ளஸ் யூடிப்யூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பட பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகை சமந்தா ரூத் பிரபு உடல் நலக் குறைவு காரணமா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதனைத் தொடர்ந்து உடல் நலம் சற்று சரியான பிறகு முன்னதாக கமிட்டான படங்களை நடித்து முடித்தார். படங்கள் மட்டும் சீரிஸ்களில் நடித்து முடித்த நடிகை சமந்தா தற்போது தயாரிப்பாளராக படங்களில் பணியாற்றத் தொடங்கியுள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் குஷி. 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்த நிலையில் நடிகை சமந்தா நாயகியாக நடித்திருந்தார்.

கடவுள் நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்தப் படத்தின் மையக் கருத்தாக இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா வேறு எந்தப் படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதே போல படத்தின் ட்ரெய்லர் வெளியான போது நடிகை சமந்தா அந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்ட போது தனது சினிமா அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். மேலும் தற்போது படம் 9-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இந்த நிலையில் நடிகை சமந்தா அளித்தப் பேட்டியில் அவர் முன்னதாக புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் டான்ஸ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் அந்தப் பாடலில் நடன் ஆடிய போது பலரும் நான் யாருக்கோ எதோ சொல்ல நினைக்கிறதாக நினைத்தனர். ஆனால் உண்மையிலேயே நான் அந்தப் பாடலில் நடித்ததற்கு காரணம் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட சவாலாக நினைத்தேன்.

நான் என்னை எப்போது ஒரு கவர்ச்சி நிறைந்த அழகான பெண்ணாக நினைத்தது இல்லை. அதனால் ஊ சொல்றியா பாடல் என்னை நானே பரிசோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நினைத்தேன். மேலும் இதுமாதிரியான விசயங்களை அதற்கு முன் நான் செய்ததே இல்லை. அதை நான் எனக்கு கொடுத்துக்கொண்ட சவாலாக மட்டுமே நான் நினைத்தேன் என்றும் மேலும் அது ஒரே ஒருமுறை மட்டும் தான் செய்வேன் என்றும் எனக்கு தெரியும் என்றும் நடிகை சமந்தா அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!
பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!...
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!...
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!...
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்......
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!...
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்...
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...