பொது மேடைகளில் கண்கலங்குவது ஏன்… வெளிப்படையாக பேசிய சமந்தா

Actress Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகம் ஆன தனது முதல் படமான சுபம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சமீபத்தில் கலந்துகொண்டார். நிகழ்வின் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் சமந்தா கண்ணீரை அடக்க முடியாமல் தவித்து இறுதியில் கண்களில் இருந்து நீர் கசிந்து விடுகின்றது.

பொது மேடைகளில் கண்கலங்குவது ஏன்... வெளிப்படையாக பேசிய சமந்தா

சமந்தா ரூத் பிரபு

Published: 

06 May 2025 17:12 PM

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu) கண்கலங்கும் வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இது அவரது ரசிகர்களுக்கு மன வேதனையை அளித்து வரும் நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தெலுங்கு மொழியில் 2010-ம் ஆண்டு வெளியான யே மாயா சேசாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் நாக சைதன்யா (Naga Chaithanya) நாயகனாக நடிக்க இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

தமிழில் 2010-ம் ஆண்டு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் சமந்தா ரூத் பிரபு. இதில் நாயகனாக நடிகர் அதர்வா முரளி அறிமுகம் ஆகி இருந்தார். ஒரு ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு என வெவ்வேறு படங்களில் அறிமுகம் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை சமந்தா.

தொடர்ந்து தமிழில் மாஸ்கோவின் காதலி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெரி, 24, மெர்சல், இரும்புதிரை, சீமராஜா, யூடர்ன், சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்துள்ளார்.

இவர் தமிழில் இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்ததற்கு பிறகு வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. ஆனால் தெலுங்கில் இறுதியாக 2023-ம் ஆண்டு குஷி படத்தில் நடித்தார். இதில் நாயகனாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இருந்தார். படத்தில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை சமந்தா தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பது மட்டும் இன்றி தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார் நடிகை சமந்தா. இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள சுபம் படம் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது.

நடிகை சமந்தா தயாரிப்பில் உருவாகும் சுபம் படம்:

மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. மேலும் அதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகை சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா பொது மேடைகளில் கண்கலங்குவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, நீங்கள் எனக்கு கொடுக்கும் வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. பொது மேடைகளில் நான் சில நேரங்களில் கண்கலங்கி கண்களைத் துடைப்பதற்குக் காரணம் சோகமாகவோ எமோஷனலாகி வருத்தத்தில் இருப்பது அல்ல. மேடைகளில் போடப்பட்டுள்ள ஒளி விளக்குகளின் அதிகமான வெளிச்சத்தைப் பார்ப்பதால் எனது கண்கள் சென்சிட்டிவாகி கண்ணீர் வந்துவிகிறது. நான் நன்றாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்களுடைய அன்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.