பிரபல நடிகை ஜனனிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்!

Actress Janani got married today: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஜனனி. இவர் இன்று தனது உறவினர்கள் மற்றும் நெறுங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகை ஜனனிக்கு டும் டும் டும்... வைரலாகும் போட்டோஸ்!

ஜனனி மற்றும் சாய் ரோஷன் ஷ்யாம்

Published: 

30 Mar 2026 18:36 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஜனனி. இவரை முன்னதாக திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஜனனி ஐயர் என்று குறிப்பிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து தனது பெயருக்கு பின்னால் உள்ள ஐயர் என்பதை நீக்கி இனி தன்னை ஜனனி என்றே குறிப்பிட வேண்டுமாரு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை ஜனனி என்றே அடையாளப்படுத்தி வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரு திரு துறு துறு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் நடிகை ஜனனி நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களிலேயும் அவர் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்திலேயே நடித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பயந்த போலீஸ் கதாபபத்திரத்தில் நடித்து இருந்த ஜனனி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜனனி நடிப்பில் வெளியான தெகிடி மற்றும் அதே கண்கள் என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜனனி.

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி:

அதன்படி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜனனிக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண நிச்சயம் நடைப்பெற்றது. தனது காதலர் சாய் ரோஷன் ஷ்யாம் உடன் நடைப்பெற்ற திருமண நிச்சைய புகைப்படங்களை நடிகை ஜனனி சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இன்று உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ஜனனி தனது நீண்ட நாள் காதலர் சாய் ரோஷன் ஷ்யாமை திருமணன் செய்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… GV Prakash: டீசரில் பாதிதான்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு – ஜிவி.பிரகாஷ் பேச்சு!

நடிகை ஜனனி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us
Related Stories
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..