தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி – நடிகை அதிதி சங்கர் ஓபன் டாக்

Actress Aditi Sankar: தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த நடிகை அதிதி சங்கர் அதனைத் தொடர்ந்து முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாய படத்தில் நடித்தார். இயக்குநர் இயக்குநர் விஷ்னு வரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி - நடிகை அதிதி சங்கர் ஓபன் டாக்

நடிகை அதிதி சங்கர்

Published: 

13 May 2025 08:39 AM

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று அன்புடன் அழைக்கப்படுவர் இயக்குநர் சங்கர் (Director Sankar). இவர் இயக்கிய படங்கள் பல ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. இவரது இரண்டாவது மகள் தான் நடிகை அதிதி சங்கர் (Aditi Sankar). மருத்துவம் படித்த இவர் சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக மருத்துவ துறையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை அதிதி சங்கர். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, மனோஜ் பாரதிராஜா, இளவரசு, சிங்கம் புலி, மைனா நந்தினி, இந்திரஜா சங்கர் என பலர் இதில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நடிகையாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆன அதிதி சங்கர் படத்தில் பாடல் ஒன்று பாடி பாடகியாகவும் அறிமுகம் ஆனார். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான் இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் நடிகை அதிதி சங்கரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சிவகர்த்திகேயனுடன் மாவீரன்:

இந்தப் படத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு நடிகை அதிதி சங்கர் மாவீரன் படத்தில் நடித்தார். இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிய இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆக்‌ஷன் ஃபேண்டசி பாணியில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, சரிதா, மிஸ்கின், மோனிஷா, சுனில் என பலர் இந்தப் படத்தில் நடித்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தமிழில் இவர் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்துந் அடித்த ஒன்ஸ் மோர் படம் மற்றும் தெலுங்கில் பைரவம் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளா. இந்தப் படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை அதிதி சங்கர் தனது தெலுங்கு படத்தின் அனுபம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தமிழி நான் அறிமுகம் ஆன முதல் படத்தைப் பார்த்த இயக்குநர் விஜய் தெலுங்கில் உருவாகி வரும் பைரவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார், மேலும், தெலுங்கு மொழியில் நடிக்க சிரமகாக இருக்கும் என்று நினைத்தேன் அப்படி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.