கமல் ஹாசனுடனான முத்தக் காட்சி… நடிகை அபிராமி சொன்ன விசயம்

நடிகை அபிராமி தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் கமல் ஹாசனின் மனைவியாக நடிகை அபிராமி நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் காட்சியில் கமல் ஹாசனுடனான முத்தக் காட்சி குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கமல் ஹாசனுடனான முத்தக் காட்சி... நடிகை அபிராமி சொன்ன விசயம்

கமல் ஹாசன், அபிராமி

Published: 

29 May 2025 14:48 PM

 IST

தமிழ் சினிமாவில் நாயகியாகவும், குணசித்திர நடிகையாகவும், கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் வலம் வருபவர் நடிகை அபிராமி (Actress Abhirami). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 2000-ம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்த வானலில் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் அபிராமி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து இருந்தாலும் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது கமல் ஹாசனின் விருமாண்டி படம் தான். நடிகர் கமல் ஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அபிராமி கலக்கி இருப்பார். இவரது நடிப்பும் நடிகர் கமல் ஹாசனுடனான இவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியான அபிராமி:

விருமாண்டி படத்தில் இவர்களின் நடிப்பு கொண்டாடப்பட்டாலும் அந்தப் படத்தில் இவர் உயிரிழக்கும் காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து இந்த கூட்டணி எப்போது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தக் லைஃப் படத்தில் நிகழ்ந்துள்ளது.

மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் கூட்டணியில் தக் லைஃப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நடிகர்களின் பெயர்கள் தொடர்ந்து கசிந்தது. மேலும் படப்பிடிப்புத் தள புகைப்படம் ஒன்று வெளியான போது அதில் நடிகை அபிராமி கமல் ஹாசனின் மனைவியாக நடித்திருப்பது தெரிந்தது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தக் லைஃப் பட ட்ரெய்லர் வந்த முத்தக் காட்சி:

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் நடிகை அபிராமிக்கு நடிகர் கமல் ஹாசன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியும், நடிகை த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சியும் அமைந்து இருந்தது. இதனைப்பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து விமர்சிக்க தொடங்கினர்.

நடிகை அபிராமியின் இன்ஸ்டா பதிவு:

முன்னதாக நடிகை த்ரிஷா அவருடைய காட்சி குறித்து விளக்கம் அளித்து விட்டார். இந்த நிலையில் நடிகை அபிராமி அவரது முத்த காட்சி குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அபிராமி இந்த காலத்தில் எதுதான் சர்சையில் சிக்குவது இல்லை. அப்படி சர்ச்சையில் சிக்காமல் எல்லாம் நம்மால் தப்பிக்கவே முடியாது.

மேலும் மணிரத்னம் சாரின் கதையை விமர்சிக்கும் அளவிற்கு நான் தகுதியானவள் இல்லை. அவர் அந்தப் படத்தில் அந்த காட்சி தேவை என்று நினைத்தால் அதனை கண்டிப்பாக நான் நடிப்பேன். அதுதான் என்னுடைய வேலை என்று நடிகை அபிராமி முத்தக் காட்சி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..