29 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
29 Official Trailer Out Now | தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள படம் 29. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

29 படம்
தமிழ் சினிமாவில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகியப் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் ரத்னகுமார். மேயாத மான் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரத்னகுமார் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் திரைக்கதை ஆசிரியராக ரத்னகுமார் பணியாற்றி உள்ளார். அதிலும் குறிப்பாக இயக்குநர் ரத்னகுமார் அவரது நண்பர் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு தொடர்ந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ரத்னகுமார் இயக்கி உள்ள படம் 29. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் வருமின்ற 08-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விது நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் முன்னதாக ரெட்ரோ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
29 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:
இந்த 29 படத்தினை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜி-ஸ்க்வாட் சார்பாக தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். படத்தில் கல்லூரியில் படிக்கும் போதே விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் காதலிக்க தொடங்கி வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களில் பல விசயங்களை சந்திக்கின்றனர். இதில் இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறாக மாறுகிறது. இறுதியில் அனைத்தையும் சரி செய்து காதலில் ஜெயித்தார்களா இல்லையா என்பதே இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here’s the #29TheFilm TRAILER guys❤️❤️
Need all your love and support 🤗❤️https://t.co/x8nnARQr61This is for you @MrRathna ❤️@kaarthekeyens @karthiksubbaraj @stonebenchers @GSquadOffl#29FromMay8 @RSeanRoldan @ActorVidhu @PreethiOffl @PradeepBoopath2 @madheshmanickam… pic.twitter.com/GzZloVKNLH
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 6, 2026
Also Read… தனுஷின் 55-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ