தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Athiradi Movie Release Update Viral On Social Media: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் டொவினோ தாமஸ், பேசில் ஜோசஃப் மற்றும் வினீத் ஸ்ரீநிவாசன். இவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

அதிரடி

Published: 

06 Apr 2026 13:25 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. அதன்படி இந்த மலையாளப் படங்கள் அனைத்தும் மலையாள ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் டொவினோ தாமஸ், பேசில் ஜோசஃப் மற்றும் வினீத் ஸ்ரீநிவாசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் அதிரடி. இவர்களின் நடிப்பில் தனித்தனியாக வெளியாகும் படங்களே தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து நடித்து இருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் அவர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மற்ற மொழி ரசிகர்களும் அப்படியான படங்களை எதிர்பார்ப்பதை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி பட ரிலீஸ் எப்போது:

இந்த நிலையில் பேசில் ஜோசஃப், வினித் ஸ்ரீநிவாசன் மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள அதிரடி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… Nayanthara: சல்மான் கானுடன் ஜோடி.. சம்பளத்தில் புதிய உச்சம் தொட்ட நயன்தாரா!

நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்