லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தின் பார்ட் 2 வருமா? வைரலாகும் வீடியோ

Love Actor Drama Movie Part 2 Update: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தற்போது முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தின் பார்ட் 2 வருமா? வைரலாகும் வீடியோ

லவ் ஆக்‌ஷன் ட்ராமா

Published: 

23 Mar 2026 20:23 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா படம். இந்தப் படத்தை இயக்குநர் தயன் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கி இருந்தார். இவர் இயக்குநராக மட்டும் இன்றி தற்போது பல சூப்பர் ஹிட் படங்களில் நாயகனாகவும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜு வர்கீஸ், வசிஷ்டர், பிரஜின் பத்மநாபன், துர்கா கிருஷ்ணா, ஸ்ரீனிவாசன், மல்லிகா சுகுமாரன், ரெஞ்சி பணிக்கர், பசில் ஜோசப், ஜூட் அந்தனி ஜோசப், பிஜு சோபானம், தன்யா பாலகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சுந்தர் ராமு, காயத்ரி ஷான், விஸ்மயா, ஜீவிகா, சீதா, வினீத் ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன், பகத் மானுவல், தீபக் பரம்போல், ஹரிகிருஷ்ணன், கீவர்கீஸ் ஈபன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லவ் ஆக்‌ஷன் ட்ராமா படத்தின் பார்ட் 2 வருமா?

ரொமாண்டிக் காமெடிப் படமாக உருவான இந்தப் படத்தில் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இருவரும் பால்ய காலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லா நிலையிலும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். இவரும் எந்தவித கவலையும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் நிவின் பாலியின் முறைப்பெண் சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைக்கு உடல்நலக் குறைவு வரும் என்று ஒரு தகவலைப் பார்த்துவிட்டு அவரை ப்ரேகப் செய்துவிடுவார்.

இப்படி இருக்கும் நிலையில் முறைப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற போகிறது என்ற வருத்தத்தில் நிவின்பாலி இருக்கும் நிலையில் அந்த திருமண விழாவில் நடிகை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். நயன்தாராவும் நிவின்பாலியை காதலித்தாரா? அந்த காதல் கைக்கூடியதா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் படக்குழுவினர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூடியபோது இரண்டாம் பாகம் பண்ணுவது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்

இணையத்தில் வைரலாகும் வீடியோ:

Also Read… தியேட்டரில் கெத்து காட்டும் தாய் கிழவி படம்… 25-வது நாளை கொண்டாடும் படக்குழு

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..