இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்… ஜூன் மாதம் வெளியாகும் படங்கள் இது

Theatre Release Movies: கடந்த மே மாதம் பல முக்கிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இந்த ஜூன் மாதம் கமல் ஹாசன், தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்... ஜூன் மாதம் வெளியாகும் படங்கள் இது

படங்கள்

Published: 

02 Jun 2025 20:54 PM

 IST

தக் லைஃப்: இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், சான்யா மல்கோத்ரா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் படம் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளது. இந்த காரணமாக படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

குபேரா: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ராயன். அவரது நடிப்பில் 50-வது படமாக வெளியான இந்தப் படத்தை அவரே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்தார் நடிகர் தனுஷ். இந்தப் படத்திற்கு குபேரா என்ற பெயரிட்டு போஸ்டர் வெளியிட்ட போது அது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகர்ஜுனாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜிம் சர்ப், தலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, ஹரீஷ் பெராடி, திவ்யா டிகேட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்கன்: நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் தற்போது உருவாகியுள்ள படம் மார்கன். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, அஜய் திஷன், வினோத் சாகர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்ததுடன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..