அந்தப் படத்தின் கதையை படுத்துக்கொண்டே தான் கேட்டேன் – நடிகர் யோகி பாபு
Actor Yogi Babu: தமிழ் சினிமாவில் கதையின் நாயகன், காமெடியன், சிறப்பு கதாப்பாத்திரம் என தனக்கான ரோலை மிகவும் சிறப்பாக செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக உள்ளவர் நடிகர் யோகி பாபு. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் யோகி பாபு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu). தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டும் இன்றி அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்தப் படம் மண்டேலா. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் எழுதி இயக்கி இருந்தார். இது இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள்ஷீலா ராஜ்குமார்,
சங்கிலி முருகன், முகேஷ், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, சங்கர் தாஸ், டக்ளஸ் குமாரமூர்த்தி, கல்கி, அ.குணசீலன், ஆறு பாலா, பிரசன்னா பாலச்சந்திரன், பாண்டியம்மாள், செந்தி குமாரி, தீபா சங்கர், ஜார்ஜ் மரியன், சரண்யா ரவிச்சந்திரன், சுபாதினி சுப்ரமணியன், செம்மலர் அன்னம், மாஸ்டர் லிங்கேஷ், வி. கோபிராம், வி.விக்னேஷ், யாசர், சாய் சங்கர், ஆல்வின் ராமையா, சோனைமுத்து, ஜே.எஸ்.மணிக்குழலன், பஞ்சவர்ணம், கஸ்தூரி, பாலாஜி அய்யா, ஒரு கோடி முத்தம்மா, கும்கி மீனாட்சி, பிரகாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மண்டேலா படத்தின் கதையை படுத்துக்கொண்டே கேட்டேன்:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் யோகி பாபு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் மடோன் அஸ்வின் தன்னிடம் கதை சொல்ல வந்தபோது மிகவும் சோர்வாக தான் இருந்ததாகவும் அதனால் படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது மடோன் அஸ்வின் வந்ததும் அவருக்கும் ஒரு தலையணையை கொடுத்து படுத்துக்கொண்டே கதை சொல் என்றேன்
அவர் உடனே என்ன அண்ணா சொல்றீங்க என்று கேட்டார். நான் டேய் டயர்டா இருக்குடா நீயும் படுத்துட்டே சொல்லு நானும் படுத்துட்டே கேக்குறேன் என்று அப்படிதான் மண்டேலா படத்தின் கதையைக் கேட்டேன் என்று அந்தப் பேட்டியில் நடிகர் யோகி பாபு தெரிவித்து இருந்தார்.
Also Read… ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது ஒருநாளும் நடக்காது – மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகர் யோகி பாபு சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… தீபாவளியை முன்னிட்டு புது ட்ரெய்லரை வெளியிட்டது காந்தாரா சாப்டர் 1 படக்குழு