Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishal : பொண்ணு பாத்தாச்சு.. இன்னும் 4 மாதங்களில் திருமணம்… ஹேப்பி நியூஸ் சொன்ன விஷால்!

Actor Vishal Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது அவரே திருமணத்தைப் பற்றிப் பேசியுள்ளார். இன்னும் 4 மத்தில் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

Vishal : பொண்ணு பாத்தாச்சு.. இன்னும் 4 மாதங்களில் திருமணம்…  ஹேப்பி நியூஸ் சொன்ன விஷால்!
நடிகர் விஷால்
barath-murugan
Barath Murugan | Published: 17 May 2025 15:53 PM

கோலிவுட் சினிமாவில் நடிகர் அர்ஜுனின் (Arjun) உதவி இயக்குநராக நுழைந்தவர் நடிகர் விஷால் (Vishal). இதைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். மேலும் இவருக்குத் தமிழில் முதல் படமாக அமைந்தது செல்லமே (Chellemae). கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் சினிமாவில் முன்னணி நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் சுமார் 12 வருடத்திற்குப் பின், இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja) . இந்த படமானது கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியானது. சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் 12 வருடங்களுக்குப் பின் வெளியாகி வெற்றி பெற்ற முதல் படம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாதவர் போல காணப்பட்டார். இதனையடுத்து அவர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. அடுத்த சில நாட்களில் சாதாரணமாக பேட்டியளித்து தன்னை சுற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், அதைப் பற்றி அவர் எதுவுமே கூறவில்லை.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தில் தான் தனக்குத் திருமணம் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்டட வேலைகள் சிறப்பாக நடந்துவரும் நிலையில், நடிகர் விஷால், தனக்கு பொண்ணு பாத்தாச்சு என்றும், கல்யாணத்தைப் பற்றிப் பேசி முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்தை பற்றி  நடிகர் விஷால் பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடம்தான் எனது கனவாக இருந்தது, அதனால்தான் கட்டிடம் முழுமையாகக் கட்டிய பிறகே திருமணம் என்று அறிவித்திருந்தேன். நான் அதை வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் கூறவில்லை, அதை நான் சவாலாக எடுத்துக்கொண்டேன். என்ன நான் இந்த கட்டடம் வெறும் 3 ஆண்டுகளுக்குள் கட்டிமுடித்துவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் அதற்கு 9 வருடங்கள் ஆகியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் முடியும் தறுவாயில் இருக்கும் நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 15ம் தேதியில் திறப்பதற்குத் திட்டம் போட்டிருக்கிறோம்.

அதைத் தொடர்ந்தும் எனது திருமணம் வரும் 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் எனக்குத் திருமணம் நடைபெறும்.இல்லையெனில் எனது பிறந்தநாளான 2025, ஆகஸ்ட் 29ம் தேதியில் கூட எனக்குத் திருமணம் நடைபெறலாம். எப்படியும் இன்னும் 4 மாதங்களில் எனக்குத் திருமணம் உறுதி. மேலும் பொண்ணு பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு, எனக்குக் காதல் திருமணம்தான். அந்த பெண் யார், அவரின் பெயர் என்ன என்பதைப் பற்றிச் சரியான நேரம் வரும்போது கூறுகிறேன். அந்த பெண்ணை ஒரு மாதமாகத்தான் காதல் செய்து வருகிறேன், விரைவில் எனது ரசிகர்கள் அனைவருக்கும் நல்ல செய்தி நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தற்போது நடிகர் விஷால் கூறிய இந்த மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த காதலி யார், அவர் நடிகையா எனப் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் மேலும் நடிகர் விஷால் இது குறித்த அறிவிப்புகளை விரைவில் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!...
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!...
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?...
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது...
'தக் லைஃப்' படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நெகிழ்ச்சி!
'தக் லைஃப்' படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நெகிழ்ச்சி!...
நீட் முடிவு வெளியீட்டுக்கு தற்காலிக தடை: சென்னை உயர்நீதிமன்றம்...
நீட் முடிவு வெளியீட்டுக்கு தற்காலிக தடை: சென்னை உயர்நீதிமன்றம்......
2026 தேர்தலில் படுதோல்விதான்! எடப்பாடி பழனிசாமியை சாடிய RS பாரதி
2026 தேர்தலில் படுதோல்விதான்! எடப்பாடி பழனிசாமியை சாடிய RS பாரதி...
மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்- சுஜாதா விஜய்குமார்!
மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்- சுஜாதா விஜய்குமார்!...
மின்சாரம் குறித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை: அமைச்சர்
மின்சாரம் குறித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை: அமைச்சர்...
கமல் ஹாசன் - சிலம்பரசனின் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
கமல் ஹாசன் - சிலம்பரசனின் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
Android 16 : ஒரே அப்டேட்டில் இவ்வளவு வசதிகளா?
Android 16 : ஒரே அப்டேட்டில் இவ்வளவு வசதிகளா?...