மகாராஜா படத்தில் அந்த க்ளைமேக்ஸ்… அனுராக் காஷ்யப்பின் நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி!

Actor Vijay Sethupathi: பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் அனுராக் காஷ்யப். நடிகை நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து பல தமிழ் படங்களில் அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார்.

மகாராஜா படத்தில் அந்த க்ளைமேக்ஸ்... அனுராக் காஷ்யப்பின் நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி!

மகாராஜா

Published: 

25 May 2025 08:09 AM

 IST

நடிகர் விஜய் சேதுபதியின் (Actor Vijay Sethupathi) 50-வது படமாக திரையரங்குகளில் வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், சச்சனா நமிதாஸ், மணிகண்டன், நடராஜன் சுப்பிரமணியம், சிங்கம்புலி, அபிராமி, முனீஷ்காந்த்,  பாரதிராஜா, அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அது மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் இந்தப் படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜப்பான் நாட்டில் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த மகாராஜா படத்தை பார்த்த ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இது செய்திகளில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் 50-வது படம் மகாராஜா:

இந்த மகாராஜா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முடிதிருத்துபவராக நடித்துள்ளார். ஒரு வித்யாசமான வழக்குடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார் விஜய் சேதுபதி. தனது வீட்டில் இருந்த லட்சுமி என்ற இரும்பு குப்பை தொட்டியை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்கிறார்.

அந்த குப்பை தொட்டியை கண்டுபிடித்து கொடுக்க அங்கு உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு பல லட்சங்கள் பணத்தை செலவளிக்கிறார். புகார் கொடுக்க வந்த விஜய் சேதுபதியின் நோக்கம் குப்பை தொட்டியை கண்டுபிடிபது இல்லை என்பதை புரிந்துகொண்ட காவல் துறையினர் அவரது நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

நடிகர் விஜய் சேதுபதியின் எக்ஸ் தள பதிவு:

மகாராஜாவில் வில்லனாக மிரட்டிய அனுராக் காஷ்யப்:

நடிகர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கும் முரட்டு வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கும் போது அனுராக் காஷ்யப்பின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒரு இயக்குநரும் என்பதால் படக்குழுவின் சூழ்நிலையை புரிந்துகொண்டு அந்த காட்சியை நடித்து கொடுத்தார் என்று விஜய் சேதுபதி அனுராக் காஷ்யப்பை பாராட்டியுள்ளார்.