சீரடி சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய் – வைரலாகும் வீடியோ
Actor Vijay Visit Shirdi Sai Baba Temple: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தேர்தலின் முடிவுகள் வருகின்ற மே மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விஜய் தொடர்ந்து கோவில்களுக்கு செல்வது வைரலாகி வருகின்றது

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கும் போதே நடிகர் தளபதி விஜய் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அது என்ன என்றால் சினிமாவில் தான் உச்ச நடிகராக இருக்க காரணமாக உள்ள தமிழக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே கட்சி தொடங்கி இருந்தாலும் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தனது கட்சியின் சார்பாக தனித்து போட்டியிட்டு உள்ளனர். 234 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் சில காரணங்களால் விலகியதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளரை தங்களுடன் இணைந்துக் கொண்டு 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளனர்.
இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் இன்னும் 5 நாட்களில் வெளியாக உள்ளது. முன்னதாக நடைப்பெற்ற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மிகுந்த ஆர்வத்துடன் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்கள் தங்களது முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
சீரடி சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்:
இந்த நிலையில் தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நடிகர் விஜய் தனது ஆன்மீக சுற்றுழாவில் உள்ளார். அதன்படி நடிகர் விஜய் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று சீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Peddi: ராம் சரணின் ‘பெடி’ படத்தில் ஸ்பெஷல் பாடலில் நடனமாடும் கோலிவுட் நாயகி!
இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜயின் வீடியோ:
Thalapathy VIJAY seeks blessings at the Sai Baba temple in Shirdi 🙏🏼🙏🏼 pic.twitter.com/TIecAi51qW
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 29, 2026
Also Read… பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்