நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது மார்கன் பட ட்ரெய்லர்!

Maargan Movie Official Trailer: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மார்கன். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் மார்கன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது மார்கன் பட ட்ரெய்லர்!

மார்கன் பட ட்ரெய்லர்

Published: 

26 May 2025 18:17 PM

 IST

நடிகர் விஜய் ஆண்டனியின் (Actor Vijay Antony) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மார்கன். இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் அஜய் திஷன், சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். மேலும் மார்கன் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கவனம் பெறும் மார்கன் பட ட்ரெய்லர்:

படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பெண்களை தொடர்ந்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் பணியில் அவர் ஈடுபடுகிறார். அந்த சைக்கோ கொலைகாரன் ஒருவிதமான ஊசியை தான் கொலை செய்பவர்களுக்கு போடுகிறார்.

விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அந்த ஊசி போட்டதும் இறந்தவர்களின் உடல் கருகிய நிலையை அடைகிறது. தொடர்ந்து அந்த விசாரணையில் தன்னுடன் இறந்த பெண் காவல் துறை அதிகாரியையும் அந்த சைக்கோ கொலைகாரன் கொலை செய்து விடுகிறார். தொடர்ந்து விசாரணையில் ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து உணமை வாங்க விஜய் ஆண்டனி முயற்சிக்கிறார்.

அவர்தான் உண்மையான சைக்கோ கொலைகாரனா இல்லையா என்பது படம் பார்க்கும் போது தான் தெரிவரும். சமீப காலமாக சைக்கோ த்ரில்லர் படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் இந்த நிலையில் மார்கனும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டூ நாயகன்:

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கொடிக்கட்டிப் பறந்த விஜய் ஆண்டனி தற்போது நாயகனாக சக்கைப்போடு போட்டு வருகின்றார். இவர் நடிக்கும் படங்களை ரசிகரக்ளிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் இசையமைக்கும் பாடல்களுக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல நடிப்பிற்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!
பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா
Jana Nayagan: அரசியல் நிகழ்ச்சியல்ல தளபதி திருவிழா இசைவெளியீட்டு விழா.. அதிரடி எச்சரிக்கை கொடுத்த மலேசிய போலீஸ்!
இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!
Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!
ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது – திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்