இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் ரீசென்ட் போட்டோஸ்!

Actor Suriya: கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது வரிசையாக படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவில் நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் ரீசென்ட் போட்டோஸ்!

சூர்யா

Published: 

21 Aug 2025 20:43 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி சூர்யாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் பண்டிகை காலத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக படம் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

மேலும், இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே படத்டின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் கமிட்டானார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இரண்டாவது தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடையே வைரலாகும் சூர்யாவின் ரீசென்ட் போட்டோஸ்:

இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யாவின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகர் சூர்யா சமீபத்தில் குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவில் நடிகர் சூர்யாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் சூர்யாவின் போட்டோ:

Also Read… இணையத்தில் கவனம் பெறும் ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவல்

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..