Soori : ஓராண்டை நிறைவு செய்த ‘கருடன்’.. சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
One Year Of Garudan : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. இவன் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் கருடன். சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் சூரியின் நடிப்பில் வெளியான இப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

கருடன் திரைப்படம்
நடிகர்கள் தனுஷ் (Dhanush) , சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) போன்ற முன்னணி நடிகர்களில் படங்களை இயக்கி வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் (R. S. Durai Senthilkumar). இவரின் இயக்கத்தில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு என பல வெற்றிப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து, இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம்தான் கருடன்( Garudan) . இந்த படத்தில் நடிகர்கள் சூரி (soori), உன்னி முகுந்தன் (Unni Mukundan) மற்றும் சசிகுமார் (Sasikumar) என முன்னணி பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் மிகவும் அருமையாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சசிகுமார், உன்னி முகுந்தன் இணைந்து நடித்திருந்தாலும், படத்தில் கதாநாயகனாகச் சூரிதான் முக்கிய ரோலில் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார்.
இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த கருடன் படமானது கடந்த 2024ம் ஆண்டு மே 31ம் தேதியில் வெளியானது. இந்நிலையில், இன்று 2025, மே 31ம் தேதியோடு இந்த படம் வெளியாகி 1 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் சூரி “இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும் அந்த நெகிழ்ச்சி பதிவைப் பற்றிப் பார்க்கலாம்.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
1YearOfGarudan ❤️
கருடன் 🙏
அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு.இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும்.
உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில்.
மிக்க நன்றி. 🙏😍🤝💐 pic.twitter.com/3vY78EUoTl— Actor Soori (@sooriofficial) May 31, 2025
நடிகர் சூரி இந்த பதிவில், கருடன் படத்திற்கு மக்கள், ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு, தான் சினிமாவில் மிகவும் பிரபலமடைவதற்கு இந்த கருடன் படமும் உறுதுணையாக இருந்ததாகவும் நடிகர் சூரி அந்த பதிவு விளக்கமாக பேசியுள்ளார்.
சூரியின் புதிய படங்கள் :
நடிகர் சூரியின் முன்னணி நடிப்பிலும் , கதையிலும் பிரம்மாண்டமாக வெளியான படம் மாமன். இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது எதிர்பார்த்ததைவிடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படமானது கடந்த 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. அதை தொடர்ந்து வரும் 2025, ஜூன் 2வது வாரத்தில் ஜீ5 ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரி, மண்டாடி என்ற படத்தில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் புகழேந்தி மதிமாறன் இயக்கவுள்ளார். இதில் சூரியுடன் நடிகர்கள் சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.