நடிகர் ராம் சரணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!
Ram Charan has been blessed with twins: நேற்றிரவு அவருக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராம் சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி அறிவித்து இருக்கிறார். குழந்தைகள் மற்றும் தாய் என அனைவரும் நலம் என அவர் கூறியுள்ளார்.

ராம் சரணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்
நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு நேற்றிரவு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்படி, இரட்டை குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி எதிர்பார்த்ததை போலவே ஒரு ஆண் வாரிசையும் உபாசனா பெற்றுக் கொடுத்துள்ளார். முன்னதாக, வீடே ஒரு லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கு என மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பேசியிருந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இதையும் படிங்க: ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தொலைக்காட்சி?
கருமுட்டையை உறையவைத்த உபாசனா:
நடிகர் ராம்சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தியான உபாசனாவை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் ஆன உடனே இருவரும் குழந்தையை பெற்றெடுக்கவில்லை. கருமுட்டையை உறையவைத்திருந்த உபாசனா சரியான நேரத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நம்முடைய திருமண வாழ்க்கையை முதலில் வாழலாம் என்கிற முடிவில் இருந்தார்.
2023ல் முதல் குழந்தை பிறந்தது:
கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தைக்கு க்ளின் காரா என்கிற பெயரையும் சூட்டி குடும்பமே வைபவமாக கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, உபஸ்னா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், மொத்த குடும்பமும் புது உறுப்பினரின் வரவுக்காக காத்திருந்தனர்.
சிரஞ்சீவி அறிவிப்பு:
With immense joy and a heart full of gratitude, we are happy to share that @AlwaysRamCharan and @upasanakonidela have been blessed with twins – a baby boy and a baby girl.
Both the babies and the mother are healthy and doing well. ✨
Welcoming these little ones into our family…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 31, 2026
இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக ராம் சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி அறிவித்து இருக்கிறார். குழந்தைகள் மற்றும் தாய் என அனைவரும் நலம் என அவர் கூறியுள்ளார். ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளுக்கு ராம் சரண் தற்போது அப்பா ஆகி இருக்கிறார்.
அப்பாவை போலவே 2 மகள்கள், ஒரு மகன்:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் டோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருகிறார். தந்தை 8 அடி பாய்ந்தால் தான் 80 அடி பாய்வேன் என ராஜமெளலியின் மகதீரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களில் மிரட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நடிகராகவும் மாறியுள்ளார். சிரஞ்சீவி சுரேகாவை என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 2 மகள்களையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இந்நிலையில், அப்பாவை போலவே ராம்சரணுக்கும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என பிறந்துள்ளது டோலிவுட்டை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களிடையே வைரலாகும் பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்
மகிழ்ச்சியில் ஆழ்த்திய இரட்டை குழந்தைகள்:
அதாவது, ராம்சரணுக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் உபாசனா கருவுற்று இருப்பதை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்தில் அறிவித்து வளைகாப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டனர். உபாசனாவின் அம்மா ஷோபனா காமினேனி ஏற்கனவே தனது மகளுக்கு ட்வின்ஸ் பிறக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு நேற்று இரவு ட்வின்ஸ் பிறந்துள்ளது.