Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nani : லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்.. நடிகர் நானி சொன்ன விஷயம்!

Actor Nani About Pradeep Ranganathan : தென்னிந்தியாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவர்தான் நானி. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்களில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் ஹிட் 3. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நானி, பிரதீப் ரங்கநாதன் தன்னிடம் படத்திற்காக கதையை கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

Nani : லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்.. நடிகர் நானி சொன்ன விஷயம்!
பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகர் நானி Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 26 Apr 2025 12:17 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்து வருபவர் நானி (Nani) . இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீசிற்கு தயாராகியுள்ள படம்தான் ஹிட் 3 (HIT 3). இந்த படமானது வரும் 2025, மே 1 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தமிழில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நானி, கோமாளி (Comali) மற்றும் லவ் டுடே மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) தன்னிடம் கதையைக் கூறியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரவி மோகனின் கோமாளி எனப் படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். அதைத் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் நானி சமீபத்தில், தமிழில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அந்த நேர்காணலில் நானி, பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை சொன்னாரு, கோமாளி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் என்னிடம் கதை சொன்னார். அந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க, பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருந்தார். அதை என்னுடைய தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கவிருந்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் பெரிய இளம் நடிகர், அவரின் வளர்ச்சிக்கு வாழ்த்து கூறுகிறேன். ஒருவேளை அவருடன் கூட்டணியில் படம் அமைந்தால் நிச்சயமாக நடிப்பதற்கு முயற்சி செய்வேன் என்று நடிகர் நானி தன்மையாகப் பேசியிருந்தார்.

ஹிட் 3 திரைப்படத்தின் அறிவிப்பு :

நடிகர் நானி கடைசியாக சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. மேலும் தற்போது இவரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹிட் 3. இந்த படத்தை இயக்குநர் சைலேஷ் கொளனு இயக்கியுள்ளார். இந்த படமானது ஹிட் என்ற படத்தின் தொகுப்பில் உருவாகியுள்ளது.

இந்த ஹிட் 3 படத்தில் நடிகர் நானி விசாரணை போலீசாக நடித்துள்ளார். மேலும் இதுவரை எதிர்பார்த்திடாத வன்முறை கலந்த மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த ஹிட் 3 படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படமானது வரும் 2025, மே 1 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது . இந்த படத்தின் ரிலீஸ் தேதியில்தான் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படமும் வெளியாகிறது. இந்த 2 படங்களும் மாஸ் கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. நிச்சயமாக இந்த படங்களுக்கு இடையே வசூல் முதன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...