மீண்டும் காலித் ரஹ்மான் உடன் கூட்டணி வைக்கும் மம்முட்டி – வெளியானது புது பட அப்டேட்
Mammootty New Movie Update: மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான களம்காவல் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக நடிகர் மம்முட்டி நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மம்முட்டி படம்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து படங்கள் திரிஅயரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் கலம்காவல். இந்தப் படம் கடந்த 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. சீரியல் கில்லர் கதையை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லர் பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வெளியான உண்டா படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணி சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் காலித் ரஹ்மான் உடன் கூட்டணி வைக்கும் மம்முட்டி:
அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்க உள்ள நிலையில் படத்தை கியூப்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் மார்கோ படத்தை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த கூட்டணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகர் மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy to announce my collaboration with #CubesEntertainments on our upcoming project, directed by #KhalidRahman pic.twitter.com/zhNJ2dGbx1
— Mammootty (@mammukka) December 21, 2025
Also Read… அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!