Kamal Haasan : ‘தக் லைஃப்” ரிலீஸ் தடை விவகாரம்… கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு

Kamal Haasan Files Case : நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் தக் லைஃப். இப்படத்தின் இதை வெளியீட்டு விழாவில், நடிகர் கமல் கன்னட மொழியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக, இப்படத்தின் கன்னட ரிலீசிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த தடியை நீக்கக்கோரி கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Kamal Haasan : தக் லைஃப் ரிலீஸ் தடை விவகாரம்...  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு

கமல் ஹாசன்

Published: 

02 Jun 2025 16:19 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் எழுத்திலும் நடிப்பிலும் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்திலும் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மாற்றம் கன்னடம் போன்ற மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு, கடந்த 2025, மே மாதத்தின் இறுதியில் இப்படத்தை இசை வெளியீட்டு விழா, சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உட்பட, தக் லைஃப் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழி (Kannada language) பற்றி தவறாக பேசியதாக, கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தக் லைஃப் படமானது கர்நாடகாவில் வெளியானால் திரையரங்குகளைக் கொளுத்துவோம் என  கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் கன்னட ரிலீஸ் தடையை நீக்கக்கோரி , கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பேசப்பட்ட வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

கமல் மற்றும் சிலம்பரசனின் தக் லைஃப் பட ப்ரீ புக்கிங் :

நடிகர்கள் கமல்ஹசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் தக் லைஃப் படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்படப் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் , ப்ரீ புக்கிங் கடந்த 2025, ஜூன் 1ம் தேதி காலை முதல் தொடங்கியுள்ளது. இதுவரை சுமார், ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆனதாகவும் கூறப்படுகிறது.

கமல் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி வெல்லுமா ?

இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் எதிர் எதிர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த படமானது டபுள் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் கமலின் 234வது படம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சிலம்பரசனும் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோல இந்த தக் லைஃப் படமும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..