ஆர்ஆர்ஆர் பட விழாவில் ரசிகர்களால் கடுப்பான ஜூனியர் என்டிஆர்
Actor Jr NTR: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். படத்தின் விழா ஒன்று கடந்த 11-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்றது. அப்போது ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டபோது நடிகர் ஜூனியர் என்டிஆர் கோபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பழம்பெரும் தெலுங்கு சினிமா நடிகர் என்டிஆரின் பேரன் தான் நடிகர் ஜூனியர் என்டிஆர் (Actor Jr NTR). 1991-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து 2001-ம் ஆண்டு இயக்குநர் விஆர் பிரதாப் இயக்கத்தில் வெளியான நின்னு சூடலானி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களிலாவது நடித்து விடுகிறார் ஜூனியர் என்டிஆர். இவருக்கு தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். சினிமா குடும்பத்தில் இருந்து வந்ததால் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக அமைந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைக்க நடிகர் ஜூனியர் என்டிஆர் அதிகமாக உழைத்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியான ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர்-க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடிகர் ராம் சரணும் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ் என பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீராவணி இசையமைத்திருந்தார்.
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய மொழிகள் மட்டும் இன்றி உலக அளவில் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் இசையப்பாளர் கீராவாணிக்கும் விருதுகளும் பாராட்டுகளும் பல கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
#JrNTR gets upset with fans during the RRR Live Concert at Royal Albert Hall.#RRR #RamCharan pic.twitter.com/I2YkF6O5lO
— Whynot Cinemas (@whynotcinemass_) May 11, 2025
இந்த நிலையில் 11-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற பட விழாவில் நடிகர் ஜூனியர் என்டிஆரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த நிகழ்வில் ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி கேட்டதாகவும் அதற்கு அவர் கடிந்துகொண்டதாகவும் முதலில் தகவல் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நெட்டிசன் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களிடம் கடிந்துகொள்ளவில்லை. நான் போட்டோ எடுத்துக்கொள்கிறேன் ஆனால் பொருமையாக இருங்க இல்லனா பாதுகாவளர்கள் உங்களை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று ரசிகர்களை பாதுகாக்கும் விதமாக கூறியதாக தெரிவித்துள்ளார்.