தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் – வைரலாகும் போஸ்ட்

Kubera Movie First Review: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தினை பார்த்த பிரபலம் ஒருவர் தனது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்

குபேரா

Published: 

28 May 2025 22:09 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் தற்போது தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜிம் சர்ப், தலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, திவ்யா டிகேட், கௌஷிக் மஹதா, சவுரவ் குரானா, கர்னல் ரவி சர்மா, ஹரீஷ் பெராடி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் குபேரா படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் ராகுல் தனது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர்களின் நடிப்பிலிருந்து திரைக்கதை வரை அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், தீவிரமாகவும் இருந்தன. சகோதரர் தனுஷிற்கு மற்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் காத்திருக்கின்றது.

தயாரிப்பாளர் ராகுலின் எக்ஸ் தள பதிவு:

கிங் நாகர்ஜுனா சார் மற்றும் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோரின் நடிப்பு அற்புதம். இந்தப் படம் திரையரங்குகளில் வந்து அனைவரும் அதைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என்றும் ராகுல் தனது எக்ஸ் தள பத்தில் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை சேகர் கம்முலா, சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் குபேரா படத்திற்கு அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.