ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் தனுஷின் கர பட வீடியோ… வைரலாகும் போஸ்ட்
The Name is Kara | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் டைட்டில் வெளியீட்டு வீடியோ கடந்த 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கர
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தி மொழியில் உருவான இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இந்தி சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேரே இஸ்க் மெய்ன் படம் அவரது நடிப்பில் வெளியான 53-வது படம் ஆகும்.
அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களை எந்த இயக்குநர் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. அதன்படி நடிகர் தனுஷின் 54-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜாவும், 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 56-வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் 57-வது படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் தனுஷின் கர பட வீடியோ:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் கூட்டணி வைத்துள்ள 54-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் வீடியோவை படக்குழு கடந்த 15-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
10M+ cumulative digital views for #TheNameIsKara 🔥
🔗 https://t.co/1jljcI4ycc#Kara #கர #కర #करा
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @alfredprakash17… pic.twitter.com/7e0qLtzjnK— Vels Film International (@VelsFilmIntl) January 17, 2026
Also Read… ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் மௌனம் பேசியதே… எப்போது தெரியுமா?