Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arya : சார்பட்டா பரம்பரை 2 ஷூட்டிங் எப்போது?ஆர்யா கொடுத்த அதிரடி அப்டேட்!

Sarpatta 2 Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் ஆர்யா. சமீப ஆண்டுகளில் இவரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படத்தில் ஒன்றுதான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து பாகம் 2 உருவாக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாக உள்ளது குறித்து நடிகர் ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.

Arya : சார்பட்டா பரம்பரை 2 ஷூட்டிங் எப்போது?ஆர்யா கொடுத்த அதிரடி அப்டேட்!
சார்பட்டா பரம்பரை 2 Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 13 May 2025 16:54 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் படங்களை உருவாக்கி வருபவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith). இவரின் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai). இந்த படத்தில் நடிகர் ஆர்யா (Arya) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி,  ஓடிடியில் எதிர்பாராத வரவேற்புகளைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தின் கதைக்களமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது. இதில் முக்கிய ரோலில் நடிகர்கள் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஷபீர் கள்ளரக்கள், துஷாரா விஜயன் மற்றும் அனுபமா குமார் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இரண்டு பரம்பரையை சார்ந்த குத்துச்சண்டை (Boxing) கதைக்களத்தில் அமைந்திருந்தது.

இந்த படம் வெளியீட்டிற்குத் தயாராகிய நிலையில், அதே சமயத்தில் கொரோனா நோயும் பரவலாகப் பரவிய நிலையில், இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை பாகம் 2 படமானது உருவாக்கவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஆர்யா, சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில், சார்பட்டா பரம்பரை பாகம் 2 ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகவுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில், வர வரும் 2025, ஆகஸ்ட் மத்தில் தொடங்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் தியாக பரவி வருகிறது.

நடிகர் ஆர்யா கொடுத்த அப்டேட் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா,  தற்போது, பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் ஷூட்டிங் பாதி கட்டத்தைக் கடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் வேட்டுவம் ஷூட்டிங்கை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை பாகம் 2 படத்தின் ஷூட்டிங்கும் வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக ஆரம்பிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யாவின் எக்ஸ் பதிவு :

நடிகர் ஆர்யாவின் முன்னணி நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஆர்யாவுடன் நடிகர்கள் கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா, சரத்குமார் மற்றும் அதுல்யா ரவி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது மாறுபட்ட ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...
மழையில் நனைந்த பாதுகாவலருக்கு குடையாக மாறிய யானைகள்!
மழையில் நனைந்த பாதுகாவலருக்கு குடையாக மாறிய யானைகள்!...
ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் முடிவு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா
ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் முடிவு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா...
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்!
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்!...
UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!
UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!...
டூரிஸ்ட் பேமிலி வெற்றிவிழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய சசிகுமார்!
டூரிஸ்ட் பேமிலி வெற்றிவிழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய சசிகுமார்!...