Ajith Kumar : ஹேப்பி நியூஸ்.. ‘யூடியூப் சேனல்’ தொடங்கிய நடிகர் அஜித் குமார்!

Ajith Kumar YouTube Channel : இந்திய சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார். படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமார், கார் ரேஸ் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த விவரமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar : ஹேப்பி நியூஸ்.. யூடியூப் சேனல் தொடங்கிய நடிகர் அஜித் குமார்!

அஜித் குமார் யூடியூப் சேனல்

Published: 

24 May 2025 14:34 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இதுவரை 63 படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பிலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்திலும் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது எதிர்பார்த்ததைவிடவும், அதிக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு முன் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித் கார் ரேஸ் போட்டியில் (car race) கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். இதுவரை உலகநாடுகளில் நடந்த 3 கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். கலந்துகொண்ட 3 போட்டிகளில் , 2 போட்டியில் 3வது இடத்தையும் மற்றும் ஒரு போட்டியில் 2வது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கார் ரேஸ் மீது ஆர்வம் குறையாமல், முழுமையாகத் தனது அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகுவது உண்டு. அதைத் தொடர்ந்து , ரசிகர்கள் தனது கார் ரேஸை பார்ப்பதற்காகவே, யூடியூபில் புதிதாக சேனல் (New channel YouTube) ஒன்றை ஓபன் செய்துள்ளார். இந்த சேனல் “Ajith Kumar Racing” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேனல் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் கார் ரேஸ் யூடியூப் சேனல் அறிவிப்பு :

நடிகர் அஜித்தின் புதிய யூடியூப் சேனல் இன்று 2025, மே 24ம் தேதி மதியம் 12 :30 மணி அளவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இனிமேல் நடிகர் அஜித் பங்குகொள்ளும் கார் ரேஸ் தொடர்பான வீடியோக்களை நேரலையாக இந்த யூடியூப் சேனல் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம். மேலும் இந்த சேனல் மூலம் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும், அஜித்தின் பேட்டிகளும் இதை இடம் பெரும் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் 64வது படம் :

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, தொடர்ந்து கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து வரும் 2025, நவம்பர் மாதம் முதல் புதிய படத்தின் ஷூட்டிங்கில் இனையவுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தை பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரைக் கொண்டு உருவாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜித்தின் நடிப்பில் இறுதியாக வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்றது. குட் பேட் அக்லி. இந்த படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடனும் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.