With Love Movie: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

With Love Movie X Reviews: அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜனின் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் வித் லவ். பள்ளிப்பருவ காதலை தேடியலையும், காதலர்களை மையமாக கொண்ட இப்படம் இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

With Love Movie: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் வித் லவ் படம் எப்படி இருக்கு? - விமர்சனங்கள் இதோ!

வித் லவ் திரைப்படம் X விமர்சனங்கள்

Updated On: 

06 Feb 2026 15:47 PM

 IST

நடிகர் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரனின் (Simran) நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் இப்படத்தில் இயக்குநராக சினிமாவில் நுழைந்த நிலையில், தற்போது தனது இரண்டாவது படத்திலே கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம்தான் வித் லவ் (With Love). இதை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) இதைத் தயாரித்துள்ளார். சிறு பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் தமிழ் படமாக வித் லவ் அமைந்துள்ளது. இந்த படமானது பள்ளிப்பருவ காதல் மற்றும் ரோம்-காம் கதைக்களத்தில் அமைந்துள்ளது.

இப்படமானது இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!

வித் லவ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்த எக்ஸ் பதிவு :

இந்த படமானது அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் போலவே இல்லை, அவரின் நடிப்பு இப்படத்தில் சிறப்பாகவே வந்துள்ளதாம். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த், அருமையான உணர்வு மற்றும் அப்பாவித்தனத்தை சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளார். மேலும் நடிகை அனஸ்வரா ராஜனும் தனது நடிப்பையும், அழகு மற்றும் சினிமாவில் நீண்ட துறை பயணிக்கும் அளவிற்கு தனது சிறப்பான வெளிப்பாடைக் காட்டியுள்ளார்.

வித் லவ் படத்தில் இயக்குநரின் கதை எவ்வாறு அமைந்துள்ளது:

இந்த வித் லவ் படமானது முற்றிலும் காதல் மற்றும் எமோஷனல் படமாக உருவாகியுள்ள நிலையில், ஒரு சிம்பிளான லவ் ஸ்டோரியை அறிமுக இயக்குநர் மதன் சிறப்பாகவே காட்டியுள்ளார். ஒவ்வொரு காட்ச்சியையும் அவர் எடுத்த விதமும் சிறப்பாக உள்ளது. மேலும் அபிஷன் மற்றும் அனஸ்வராவின் நடிப்பையும் சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒரு தூணாக இருப்பது ஷேன் ரோல்டனின் இசைதான். இப்படத்தில் அவரின் இசையமைப்பும் நன்றாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!

வித் லவ் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா? வேண்டாமா ?:

இந்த வித் லவ் படமானது சிம்பிள் பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்ட ஒரு ரோம்-காம் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும், அவர் அவர் பள்ளிப்பருவ முதல் காதலை தேடியலைகின்றனர். அந்த தேடுதலில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் வந்ததா? அல்லது அவர்களின் பள்ளிப்பருவ காதலர்களை கண்டர்களா? என்பதே இப்படத்தின் மைய கருவாகும். ஃபீல் குட் லவ் ஸ்டோரி படங்களை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த வித் லவ் படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
யாரும் எதிர்பார்க்காத காம்போ.. சியான்63 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
Atharvaa: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!
WIth Love Movie: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் – வைரலாகும் வீடியோ!
Sasikumar: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!
Jana Nayagan: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்