AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று முதல் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.. தவாக தலைவர் வேல்முருகன் அறிவிப்பு!

Velmurugan On DMK Alliance | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பில் இருந்து இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று அவர் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று முதல் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.. தவாக தலைவர் வேல்முருகன் அறிவிப்பு!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Mar 2026 13:08 PM IST

சென்னை, மார்ச் 22 : தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்று முதல்  திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுவரை திமுக தங்களை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் – தாவக வேல்முருகன்!

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : சென்னை சென்டிரல் – புதுடெல்லி விரைவு ரயில் சேவை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தவாகவை தொகுதி பங்கீட்டுக்கு அழைக்காத திமுக

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 43 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீடும் செய்யாமல் உள்ளது. இதுவரை தங்களை தொகுதி பங்கீட்டுக்கு அழைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “நாங்க என்ன தர்மத்துக்காகவா கட்சி நடத்துறோம்?”.. பாஜக மீது அதிருப்தி தெரிவித்த அதிமுக

செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்த வேல்முருகன்

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது, திமுக எங்களை புறக்கணித்துள்ளது. என்னை திட்டமிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. தமிழர்கள் அல்லாத அதிகாரிகளின் பேச்சை கேட்டு திமுக எங்களை புறக்கணித்துள்ளது. சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு திமுக அரசு செவி சாய்யக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளின் பிடியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. நாங்கள் திமுக அரசுக்கு குடைச்சலாக இருப்போம் என சில அதிகாரிகள் தவறான தகவல் கொடுத்துள்ளனர். நாங்கள் இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக எங்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க முன்வந்தது. எனவே திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுகிறது என்று கூறியுள்ளார்.

Follow Us