சோழ தேசம் செல்லும் தவெக தலைவர் விஜய்… உறுதியானது தேதி…எப்போது தெரியுமா!

Thanjavur TVk Executive Meeting : தஞ்சாவூரில் மார்ச் 4- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி மாவட்ட எஸ்பியிடம் கட்சியினர் மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார் .

சோழ தேசம் செல்லும் தவெக தலைவர் விஜய்... உறுதியானது தேதி...எப்போது தெரியுமா!

சோழ நாட்டுக்கு செல்லும் தவெக தலைவர் விஜய்

Published: 

28 Feb 2026 12:31 PM

 IST

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு பயணம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் மேற்கொள்ளாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாநிலங்களில் மக்கள் சந்திப்பு பயணத்தை அடுத்தடுத்து நடத்தி இருந்தார். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. மார்ச் 2- ஆவது வாரத்தில் மக்கள் சந்திப்பு பயணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியினர் மாவட்ட காவல் துறையிடம் இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 28) அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

மார்ச் 4-இல் தவெக நிர்வாகிகள் கூட்டம்

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமி பட்டியில் வருகிற மார்ச் 4- ஆம் தேதி ( புதன்கிழமை) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் மேடை மற்றும் நிழல் பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியானது அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 4,900 கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க: மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகார்… பரிதவிப்பில் பாமகவினர்!

தவெக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான பதில்

இந்த கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் தகவல் தெரிவிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மனுவின் அடிப்படையில், போலீசார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று வாகன நிறுத்தும் இடம், கட்சியினர் அமரும் இடம், அடிப்படை வசதிகள் அமைப்பதற்கான சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.அதன் அடிப்படையில், நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படும்.

3 மாதங்கள் தாமதமான தஞ்சாவூர் நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சாவூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மக்கள் சந்திப்பு பயணத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த சந்திப்பு சுமார் 3 மாதங்கள் தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!

Follow Us
Related Stories
நாளை அதிமுக பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. 35 முதல் 40 இடங்களை கேட்கும் பாஜக..
திமுகவிடம் காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல் அளிப்பு… 3 நாள்களில் சுமூக முடிவு… கிரிஷ் சோடங்கர் தகவல்!
அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!
மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகார்… பரிதவிப்பில் பாமகவினர்!
காங்கிரஸ் கேட்கும் 35 இடங்கள்.. இன்று நடக்கும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..