காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி.. வெளியான விசிக வேட்பாளர் பட்டியல்..
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது. இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் அடங்கும்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 29, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 21 கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில், நேற்றைய தினம் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, எந்தெந்த தொகுதிகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
மேலும் படிக்க: குடிசை வீட்டில் பற்றிய தீ.. அலறிய இரு உயிர்கள்.. சமையல் செய்த போது நிகழ்ந்த துயர சம்பவம்!
நேற்றைய தினம் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது பட்டியலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது. இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் அடங்கும்.
வேட்பாளர்கள் பட்டியல்:
- திண்டிவனம் (தனி) – வன்னியரசு
- பெரியகுளம் (தனி) – சக்திவேல்
- கள்ளக்குறிச்சி (தனி) – மாலதி
- பண்ருட்டி (பொது) – அப்துல் ரகுமான்
- காட்டுமன்னார்கோயில் (தனி) – திருமாவளவன்
- செய்யூர் (தனி) – சிந்தனை செல்வன்
- அரக்கோணம் (தனி) – கரோலின்
- திருப்போரூர் (பொது) – பன்னீர்தாஸ்
மேலும், இந்த முறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.எஸ். பாலாஜி, பாபு, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.