மற்றொரு கரூர் சம்பவம் நடக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார் – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்..

அளவுக்கதிகமான கூட்டம் இருந்ததால், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அவரது பிரச்சார வாகனம் சுமார் 100 மீட்டர் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. மேலும், அவருக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு நிமிடங்களில் அவர் தனது பேச்சை முடித்து அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் வில்லிவாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தாலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

மற்றொரு கரூர் சம்பவம் நடக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார் -  ஆதவ் அர்ஜுனா ஆவேசம்..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Mar 2026 23:14 PM

 IST

சென்னை, மார்ச் 30, 2026: “மற்றொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது; தேர்தல் அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என தமிழக வெற்றி கழகத்தின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதமா அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மார்ச் 30ஆம் தேதியான இன்று, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

பெரம்பூர் தொகுதியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த அவர், “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஜய் பிரச்சாரம்:

அப்போது, அளவுக்கதிகமான கூட்டம் இருந்ததால், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அவரது பிரச்சார வாகனம் சுமார் 100 மீட்டர் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. மேலும், அவருக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு நிமிடங்களில் அவர் தனது பேச்சை முடித்து அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் வில்லிவாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தாலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் படிக்க: 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

மற்றொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது:

இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதமா அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசியார். அப்போது அவர், “மற்றொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக தேர்தல் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். கொளத்தூரில் பேசுவதற்கு தலைவருக்கு மனம் வரவில்லை; ஏனெனில் அங்கு மிகப்பெரிய கூட்டம் திரண்டிருந்தது. மீண்டும் ஒரு கரூர் சம்பவம் நடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்தார். அதனால் தான் வண்டியை தடுத்து நிறுத்தினர்.

முதல்வர் மீது குற்றச்சாட்டு:

மு.க. ஸ்டாலினுக்கு ஏன் இந்த பயம்? வில்லிவாக்கத்தில் இன்று காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு வழங்கியது. ஆனால் கொளத்தூரில் அதுபோன்று இல்லை. பெரம்பூர் போல ஏன் கொளத்தூரில் காவல்துறை செயல்படவில்லை?

கொளத்தூரில் இன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு? யார் பதில் சொல்லுவார்கள்? நேர்மையான அதிகாரிகளை கொண்டு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நாங்கள் அரசியல் செய்யவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படக்கூடாது. மக்களின் பாதுகாப்பை வைத்து திமுக விளையாடுகிறது. மு.க. ஸ்டாலின் அமைதியாக இருப்பார்; ஆனால் காவல்துறை மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்,” என குற்றஞ்சாட்டினார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..