எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. நாளைய பிளான் கேன்சல்..
Edappadi Palaniswami Campaign: எடப்பாடி பழனிசாமி, செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருந்தார். இந்த சுற்றுப்பயணம் 2025 அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
அதிமுக, செப்டம்பர் 19, 2025: தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 2025, செப்டம்பர் 20, 21 ஆகிய இரண்டு தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று தொகுதி வாரியாக மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். முதல் கட்ட சுற்றுப்பயணம் 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: மது குடிக்க பணம் தரார தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்!
இதே நேரத்தில், அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். நேரடியாக இந்த நடவடிக்கையை எடுத்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் படிக்க: நாளை நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்..
அதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்:
இந்தச் சூழலில், 2025 செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருந்தார். ஆனால் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பரப்புரை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சுற்றுப்பயணம் 2025 அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.