நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..

Tamilnadu Assembly Election: அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், கே.டி.சி. நகர் வழியாகச் சென்று ரசிகர்கள், தொண்டர்களுக்கு கையசைத்து ஆதரவு திரட்டுகிறார். நெல்லையை தொடர்ந்து, தூத்​துக்​குடி செல்லும் அவர், அங்கும் ரோடு ஷோ செல்கிறார்.

நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..

விஜய் பரப்புரை

Updated On: 

08 Apr 2026 08:32 AM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில், இன்று அவர் நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, அவர் ரோடு ஷோ நடத்த 51 நிபந்​தனை​களு​டன் காவல்​துறை அனு​மதி அளித்​துள்​ளது. இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்​க​மாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட பந்தலுக்கு வருகிறார்.

இதையும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விஜய்:

அங்கு திறந்த வேனில் நின்றபடி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அத்துடன் ரோடு ஷோவும் வருகிறார். அதாவது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு 4 வழிச்சாலை வழியாக நெல்லை தாழையூத்துக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், கே.டி.சி. நகர் வழியாகச் சென்று ரசிகர்கள், தொண்டர்களுக்கு கையசைத்து ஆதரவு திரட்டுகிறார். நெல்லை பிரச்​சாரத்​தைத் தொடர்ந்து, தூத்​துக்​குடி செல்லும் அவர் பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை ரோடு ஷோ செல்கிறார்.

போலீசார் விதித்த 51 நிபந்தனைகள்:

இதனிடையே பொதுக்​கூட்​டம் நடை​பெறும் பகு​தியை திருநெல்​வேலி மாநகர காவல் ஆணை​யர் தேஷ்​முக் உள்​ளிட்ட உயர் காவல்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். கூட்​டத்​தில் பங்​கேற்​பவர்களுக்கு குடிநீர், கழிப்​பிட வசதி,ஆம்​புலன்ஸ் மற்​றும் தீயணைப்பு வாக​னங்​கள் வந்து செல்ல வசதி, ரோடு ஷோ நடத்​தும்​போது குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யில் மட்​டுமே வாக​னங்​கள் பின்​தொடர வேண்​டும், விஜய்​யின் வாக​னத்தை மோட்​டார் சைக்​கிள்​களில் பின்​தொடரக்​கூ​டாது உள்​ளிட்ட 51 நிபந்​தனை​கள் விதித்து காவல்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

எங்களுக்கு மட்டுமே நிபந்தனை:

இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், நெல்லை பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் 51 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். எங்களுக்கு மட்டுமே கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. போலீசார் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக பின்பற்றப்படுகிறது. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பரப்புரை செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றார்.

இதையும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..

234 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பு:

தலைவர் பெயரால் எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அத்தனை பெரும் புதிய மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். திரைப்படத் துறையில் உச்சத்தில் இருப்பவர் அரசியல் பணியாற்ற ஒருவர் வந்திருக்கிறார். அவர் ஏன் வரக்கூடாது என்பது தான் கேள்வி. விஜய் வர வேண்டும், அவர் தான் நாளை நாட்டை ஆள வேண்டும் என்பதே மக்களின் ஆசை. அந்த கனவு கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?