தமிழ்நாடு, புதுச்சேரி.. த.வெ.க வேட்பாளர் பட்டியல் மார்ச் 29-ல் வெளியீடு..

தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள், அதாவது 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி.. த.வெ.க வேட்பாளர் பட்டியல் மார்ச் 29-ல் வெளியீடு..

கோப்பு புகைப்படம்

Published: 

27 Mar 2026 21:51 PM

 IST

சென்னை, மார்ச் 27, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள், அதாவது 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளும் படிப்படியாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

29ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: “தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களை பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே, மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல்.. விஜய் ஆவேசம்..

இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளரும், தமிழக மக்களின் வெற்றித் தலைவருமான விஜய் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதி பெற்ற 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் வகையில், கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்